September 20, 2024
  • September 20, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஹாலிவுட் தரத்தில் தமிழில் வெளிவரும் கில்லர் சூப்!
January 8, 2024

ஹாலிவுட் தரத்தில் தமிழில் வெளிவரும் கில்லர் சூப்!

By 0 216 Views

ரே, சொஞ்சிரியா போன்ற இந்தி திரைப்படங்களை இயக்கிய அபிஷேக் சௌபே தற்போது, “கில்லர் சூப்” என்ற இணைய தொடர் இயக்கி இருக்கிறார். இத்தொடர்,      

மைஞ்சூர் என்ற கற்பனை நகரத்தில் நிகழும் இக்கதையில் பல காதல் சாரம்சங்களை உள்ளடக்கி விறுவிறுப்பான திருப்புமுனைகளைக் கொண்டது. 

சேட்டனா கௌஷிக் மற்றும் ஹனி ட்ரெஹான் தயாரித்துள்ளனர். வரும் ஜனவரி 11ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் – இல் வெளியாகிறது. இதில் மனோஜ் பாஜ்பாய், கொங்கோனா சென்ஷர்மா, நாசர், சாயாஜி ஷிண்டே, லால், அன்புதாசன், அனுலா நவ்லேகர் மற்றும் கனி குஸ்ருதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நடிகர் மனோஜ் பாஜ்பாய் கூறுகையில், ” எனது கேரியரில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். இரு கதாபாத்திரத்திலும் முற்றிலும் மாறுபட்டு நடிக்கிறேன்.

இயக்குனர் அபிஷேக் சௌபேயின் திறமையும், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் கூட்டணியும், கதையில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் உயிர் கொடுத்த நடித்த நடிகர்களையும் நான் நம்பினேன். கில்லர் சூப் ஒரு கிரைம் திரில்லர் ஆகும், பல்வேறு சாரம்சங்கள் கொண்ட இந்த சூப் அனைவரும் விரும்பி சுவைக்க கூடியதாகும்”.

சுவாதி ஷெட்டியாக நடிக்கும் நடிகர் கொங்கனா சென்ஷர்மா கூறும்போது, “சுவாதி ஷெட்டியின் கேரக்டரில் அடியெடுத்து வைப்பது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது, ஏனெனில் அந்தக் கதாபாத்திரம் ஆழம், இருள் மற்றும் நிறைய பஞ்ச்களைக் கொண்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அபிஷேக் சௌபே மற்றும் திறமையான நடிகர்கள் ஆகியோருடன் நீண்ட காலமாக தொடரில் பணிபுரிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

தூங்கும் நகரத்தின் பின்னணியில் நாங்கள் உருவாக்கிய நகைச்சுவையான உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை டிரெய்லர் வழங்குகிறது. தொடர் முழுவதும் சஸ்பென்ஸின் குறிப்புகளுடன், இது உங்களை ஆச்சரியப்படுத்தும். ‘அவள் மாட்டிக்கொள்வாளா, மாட்டாளா, சூப் கொதிக்குமா?’ கில்லர் சூப்பைப் பார்க்கும்போது பார்வையாளர்களின் எதிர்வினைக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

நெட்ஃபிளிக்ஸ் உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் பொழுதுபோக்கு சேவையாகும், 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 247 மில்லியன் கட்டண உறுப்பினர்களுடன் டிவி தொடர்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் என்று உலகளவில் மக்களின் வரவேற்பு பெற்று தரமான தொகுப்புகளை வழங்கும் நெட்ஃப்ளிக்ஸில் இப்பொழுது கில்லெர் சூப் , 2024 ஆம் ஆண்டிற்கான அட்டவணையில் இணைந்துள்ளது. 

பட குழுவினர்கள் மற்றும் நடிகர்கள்:-

இயக்குனர்: அபிஷேக் சௌபே

 தயாரிப்பு: சேட்டனா கௌஷிக் மற்றும் ஹனி ட்ரெஹான்

 உருவாக்கியது & எழுதியது: உனைசா மெர்சண்ட், அனந்த் திரிபாதி, ஹர்ஷத் நலவாடே & அபிஷேக் சௌபே

 நடிகர்கள் : மனோஜ் பாஜ்பாய், கொங்கோனா சென்சர்மா, நாசர், சாயாஜி ஷிண்டே, லால், அன்புதாசன், அனுலா நவ்லேகர், கனி குஸ்ருதி.