July 1, 2025
  • July 1, 2025
Breaking News
April 28, 2019

இந்தி ரீமேக் காஞ்சனாவில் திருநங்கையாக அமிதாப்

By 0 970 Views
தமிழில் காஞ்சனா மூன்று பாகங்களாக சக்கைபோடு போட்ட கதை தெரியும். அதில் காஞ்சனா முதல் பாகம் ரொம்பவே ஸ்பெஷல். அது போட்டுக் கொடுத்த அடித்தளத்தில்தான் அடுத்தடுத்த பாகங்களும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றன.
 
முக்கியமாக சரத் அதில் ஏற்ற திருநங்கை பாத்திரம்.
 
Kanchana in Hindi - Laaxmi Bomb

Kanchana in Hindi – Laaxmi Bomb

அந்த காஞ்சனா முதல் பாகம் இப்போது இந்தியில் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. ‘லாக்ஷ்மி பாம்’ (Laaxmi Bomb) என்ற பெயரில் ரீமேக் செய்யப் படும் அப்படத்தில் லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்.

 
அசத்தலான சரத்குமார் நடித்த வேடத்தில் அமிதாப் பச்சன் நடிப்பது ஹைலைட். கதாநாயகியாக கியரா அத்வானி நடிக்கிறார் வெற்றி ஒளிப்பதிவை ஏற்கிறார்.
 
தொடர் படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
 
அங்கேயும் மூன்று பாகங்கள் எதிர்பார்க்கலாம்தானே..?