அனைவருக்கும், வணக்கம்!
இன்று 28 ஆகஸ்ட் 2020 ‘அண்டாவ காணோம்’ திரைப்படம் JSK Prime Media App–ல் திரையிட திட்டமிட்டிருந்தோம். சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பின்னர் அதற்கான தேதியை விரைவில் அறிவிக்க உள்ளோம்.
‘அண்டாவ காணோம்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த
வாடிக்கையாளர்களுக்கு நன்றி. கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Mummy Save Me
JSK Prime Media App – IOS, Android, Fire Stick, Smart Tv, Web Browser போன்ற அனைத்து தளங்களிலும் பதிவிறக்கம் (Download) செய்ய தயார் நிலையில் உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதுமட்டுமல்லாமல் தளத்தினை பதிவிறக்கம் (Download) செய்து Sign in செய்த உடன் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இலவசமாக கண்டுகளிக்கலாம்.
‘அண்டாவ காணோம்’ திரைப்படம் ரிலீஸ் தள்ளிபோன காரணத்தினால் உடனடியாக பார்வையாளர்களுக்கு இந்த வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை 30.08.2020 அன்று ‘மம்மி சேவ் மீ’ (Mummy Save Me) திகில் திரைப்படத்தை திரையிட முடிவுசெய்துள்ளோம்.
வரும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கில் உங்களை மிரட்ட வருகிறாள் ‘மம்மி சேவ் மீ’ (Mummy Save Me). அனைவரும் கண்டுகளியுங்கள். அதற்கான கட்டணம் ரூ.60 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் ஊரடங்கில் வீட்டிலிருந்தபடியே குடும்பத்துடன் கண்டு மகிழுங்கள்.
நன்றி வணக்கம்.
அன்புடன்
JSK சதீஷ்குமார்