January 24, 2026
  • January 24, 2026
Breaking News
May 25, 2018

சென்ட்ரல் வழித்தட மெட்ரோ ரயிலில் இலவச பயணம் செய்யலாம்

By 0 1178 Views

சென்னையில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு இரண்டு வழித்தடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் பணிகளில் 28 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்து நேரு பூங்கா, எழும்பூர், சென்ட்ரல் மற்றும் சின்னமலை-டி.எம்.எஸ். ஆகிய இரு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் சென்ட்ரலில் இருந்து இனி நேரடியாக மீனம்பாக்கம் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம்.. சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை இரு வழிப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை இனி செயல்படும்.

இந்த் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டதையொட்டி இலவச பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரையில் எந்த ரெயில் நிலையத்தில் வேண்டுமென்றாலும் இன்று முதல் மூன்று நாள்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம்..