April 16, 2025
  • April 16, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • குஷ்புவுக்கு முன்பு முத்தமிட்டு நடித்தேன் – சுந்தர் சி
November 29, 2019

குஷ்புவுக்கு முன்பு முத்தமிட்டு நடித்தேன் – சுந்தர் சி

By 0 779 Views

இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள படம் ‘இருட்டு’. ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்க, புதுமுகம் சாக்‌ஷி சௌத்ரி நாயகியாக நடித்துள்ளார். VTV கணேஷ், விமலா ராமன், சாய் தன்ஷிகா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

அதில் சுந்தர் சி பேசியதிலிருந்து…

ரொம்ப நாள் கழித்து நடிகராக இங்கு நிற்கிறேன். VTV கணேஷ் சார் தான் இந்தப்படம் உருவாக காரணம். அவர் ஒரு படம் செய்யலாம் என சொன்னபோது பாதுகாப்பாக இருக்கட்டும் என ஒரு ஹாரர் படம் செய்யலாம் என சொன்னேன். 

முழுக்க பயப்படுற மாதிரி ஒரு படம் செய்யலாம் என சொன்னபோது இயக்குநராக யாரை போடலாம் எனப் பேசினோம். VZ துரை சாரை சொன்னபோது முதலில் பயந்தேன். அவர் படங்கள் பார்த்து. அவர் வயலண்டாக இருப்பார் என நினைத்தேன். ஆனால் அவர் ஒரு அப்பாவி. பேய்ப்படம் பண்ண மாட்டேன் என்றார். அவரை தயார் படுத்தி நிறைய பேய்படங்கள் பார்க்க வைத்தோம்.

பின் அவர் ஒரு அற்புதமான ஐடியாவுடன் வந்தார். இஸ்லாம் பேய் சம்மந்தப்பட்ட விஷயம் இது. இதுவரை இந்திய சினிமாவில் வந்ததே இல்லை. இயக்குநராக VZ துரை முதல் நாளிலேயே என்னை 10 டேக் நடிக்க வைத்தார். அப்புறம் இரண்டு நாள் கழித்து அவரது வேலை செய்யும் விதத்தை பழகிக்கொண்டேன். அவருக்கு திருப்தி வரும் வரை அவர் மீண்டும் மீண்டும் எடுப்பார்.

அப்படி சாக்‌ஷியை நான் முத்தமிடும் காட்சியைக் கூட பத்து டேக்குகளுக்கு மேல் எடுத்தார். அந்தநேரம் பார்த்து என் மனவி குஷ்புவும் ஷூட்டிங் வந்தார்கள். மனைவி முன்னால் கஷ்டப்பட்டு முத்திடமிட்டு நடித்தேன். அவர்களே ஒரு கட்டத்தில் புரிந்துகொண்டு வெளியில் போய் நின்று கொண்டார்கள்..!”

மரியாதை தெரிந்த குஷ்பு..!