November 23, 2024
  • November 23, 2024
Breaking News
April 15, 2020

கேரளா உல்லாச படகுகள் கொரோனா மருத்துவ வார்டுகள் ஆகின்றன

By 0 597 Views

கேரளாவில் கொரோனா வார்டுகளாக சுற்றுலா படகுகளை மாற்றியமைக்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

உலக அளவில், அதிகப்படியாக பரிசோதனைகள் நடத்தி, கொரோனா வைரஸ் பரவலை தட்டையாக மாற்றியதில், வட கொரியாதான் நம்பர் 1 தேசம். அப்படியான சோதனைகளை கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு முன்னெடுத்தது.

எனவேதான், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், அதிகமாக வந்து கொண்டிருந்தது. பரிசோதனைகளை பரவலாக்காதவரை, பாதிப்பின் முழு அளவு எப்படி தெரியும் என்பதே, கேரள அரசுக்கு ஆதரவு தெரிவித்தோர் கருத்தாக இருந்தது.

கேரளாவில் அதிக அளவுக்கு மருத்துவர்கள், மருத்துவமனைகள் இருப்பது, பரவலான பரிசோதனைகள், தனிமைப்படுத்தலுக்கு எடுத்த தீவிர முயற்சிகள் போன்றவை, பலன் கொடுத்துள்ளன.

இதனால் கேரளாவில் புதிதாக கொரோனா நோய்க்கு உள்ளாகுவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ரயில்வே சார்பில் கொரோனா வார்டுகளாக ரயில் பெட்டிகளை மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்த சூழ்நிலையில் படகு சுற்றுலாவுக்கு பெயர் போன கேரள மாநிலம் ஆலப்புலா மாவட்டத்தில் வீடுகளை போன்று அனைத்து வசதிகளையும் கொண்ட சுற்றுலா படகுகளை கொரோனா தனிவார்டுகளாக மாற்ற மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கேரளா சுற்றுலா படகுகள் உரிமையாளர் சங்கத்திடமும் அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

அப்போது கேரள அரசின் திட்டத்தை அந்த சங்கத்தினர் ஒருமனதாக ஏற்றுக் கொண்டதாக ஆலப்புலா மாவட்ட ஆட்சியர் அஞ்சனா தெரிவித்துள்ளார். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஆயிரத்து 500 சுற்றுலா படகுகள் தனிவார்டுகளாக மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.