July 15, 2024
  • July 15, 2024
Breaking News
  • Home
  • கல்வி
  • வர்த்தகம்
  • ஹீரோ மோட்டோகார்ப் ப்ரீமியம் மோட்டார் சைக்கிளை சென்னையில் அறிமுகம் செய்தது
March 16, 2024

ஹீரோ மோட்டோகார்ப் ப்ரீமியம் மோட்டார் சைக்கிளை சென்னையில் அறிமுகம் செய்தது

By 0 532 Views

நவீன அழகியல் அம்சங்கள் மற்றும் கம்பீரமான ஸ்டைலிங் உடன் மேவ்ரிக் 440 மோட்டார்சைக்கிள் அறிமுகம்

சென்னை, 16 மார்ச், 2024 –

ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களுக்கான உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப், உலகத்தரத்திலான தயாரிப்புகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பொறுப்புறுதியை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் மேவ்ரிக் 440 என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு ப்ரீமியம் மோட்டார்சைக்கிளை சென்னை மாநகரில் அறிமுகம் செய்திருக்கிறது.

மேவ்ரிக் 440 – ன் அறிமுகம், ப்ரீமியம் வகையினத்தில் உயர்பிரிவில் ஹீரோ மோட்டோகார்ப் – ன் நுழைவை அறிவிக்கிறது.

மேவ்ரிக் 440 மோட்டார் பைக் அறிமுகத்தின் வழியாக, நடுத்தர எடை கொண்ட வகையினத்தில் ஒரு வலுவான செய்தியினை ஹீரோ மோட்டோகார்ப் செய்திருக்கிறது. 40 ஆண்டுகள் என்ற செழுமையான வரலாற்றைக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் பயணத்தில் இப்புதிய பைக்கின் அறிமுகம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் நிகழ்வாகத் திகழ்கிறது. நம்பகமான மற்றும் செயல்திறன்மிக்க இருசக்கர வாகனங்களை வழங்குவதில் தனது செழுமையான பாரம்பரியத்தை சிறப்பாக பயன்படுத்தியிருக்கும் ஹீரோ மோட்டோகார்ப், 400 சிசி பிரிவின் இயக்கவியலையே இதன் மூலம் மறுவரையறை செய்ய முனைப்புடன் களமிறங்கியிருக்கிறது.

மேவ்ரிக் 440, அடிப்படை (Base), நடுத்தர (Mid) மற்றும் உயர்நிலை (Top) என்ற மூன்று வகையினங்களில் ஹீரோ மோட்டோகார்ப் – ன் டீலர்ஷிப்களில் முறையே ரூ. 199000/- (அடிப்படை), ரூ. 214000/- (இடைநிலை) மற்றும் ரூ. 224000/- (உயர்நிலை) என்ற விலையில் கிடைக்கும்.

ஒரு சிறப்பு முதல் ரைடு அனுபவத்தின் வழியாக மேவ்ரிக் 440 – ன் ஆற்றல், செயல்திறன் மற்றும் விரைவு இயக்கத்தை நேரடியாக அனுபவித்து உணரும் வாய்ப்பை ஹீரோ மோட்டோகார்ப் பைக் ஆர்வலர்களுக்கு வழங்குகிறது. சென்னை மாநகரில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஹீரோ டீலர்ஷிப்களின் வழியாக மேவ்ரிக் 440 – ஐ சோதனை ஓட்டம் (டெஸ்ட் டிரைவ்) செய்யும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளின் டெலிவரி 2024 ஏப்ரல் மாதத்திலிருந்து தொடங்கும்.

ஹீரோ மோட்டோகார்ப் – ன் இந்தியா பிசினஸ் யூனிட்டின் தலைமை பிசினஸ் அதிகாரி திரு. ரஞ்ஜிவ்ஜித் சிங் இந்நிகழ்வின்போது பேசுகையில், “புதுமைகள் நிறைந்த மற்றும் சந்தையில் உயர்நேர்த்தி செயல்திறன் மீது ஹீரோ மோட்டார்கார்ப் – ன் பொறுப்புறுதியை அழகாக வெளிப்படுத்துகின்ற மற்றும் அதிக எதிர்பார்ப்புகள் பெற்ற மோட்டார்சைக்கிளை சென்னை மாநகரில் பைக் ஆர்வலர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெரும் உற்சாகம் கொள்கிறோம். நடுத்தர எடை வகையினத்தில் 400 சிசி பிரிவின் இயக்கவியல்களை மறுவரையறை செய்யும் மேவ்ரிக் அதன் வலுவான நுழைவை அறிவிக்கிறது. எமது வாடிக்கையாளர்களின் மாற்றம் கண்டு வரும் தேவைகளை நிறைவேற்றுவதில் எமது அர்ப்பணிப்பை இந்த பைக்கின் அறிமுகம் நேர்த்தியாக சுட்டிக்காட்டுகிறது; அதுமட்டுமின்றி, பொறியியல் செயல்பாட்டில் நேர்த்தி மற்றும் வாடிக்கையாளருக்கு முழு திருப்தி வழங்கும் எமது தளராத தொடர் முயற்சியையும் இது பிரதிபலிக்கிறது.” என்று கூறினார்.

மேவ்ரிக் 440

வடிவமைப்பு
வலுவான ஸ்டைலிங் உடன் சிறப்பான அழகியல் அம்சங்களை சமநிலையில் கொண்டிருக்கும் ஒரு திடகாத்திரமான வடிவமைப்பில் மேவ்ரிக் 440 ஒரு ஸ்டைல் ஐகானாக உருவாக்கப்பட்டிருக்கிறது. பெரிய, உறுதியான ஃபியூயல் டேங்க், மெட்டல் ஸ்டைலிங்கில் பைக்கின் உடல் பாகங்கள், இன்டராக்டிவ் டெலிமேட்டிக்ஸ் சாதனங்கள், அகலமான ஹேண்டில்பார்கள் போன்ற அம்சங்கள் காண்பவர்களை நிச்சயம் ஈர்க்கும். வட்ட வடிவிலான எல்இடி புரொஜக்டர் முகப்பு விளக்குகள் இரவு நேரத்தில் உங்களுக்கு முன்புள்ள சாலையை ஒளிமயமாக்கும். ஸ்டைலுக்கும், பாதுகாப்பிற்கும் ‘இன்டலிஜென்ட் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்’ மற்றும் பகல் நேரத்தில் வாகனம் இயக்கப்படும்போது ஒளிரும் விளக்குகள் ஆகியவை இதன் அழகை மேலும் மேம்படுத்துகின்றன.

ஆற்றல் மற்றும் செயல்திறன்
மேவ்ரிக் 440-ல் எலக்ட்ரானிக் ஃபியூல் இன்ஜெக்ஷன் உடன் ஆயில் கூலருடன் காற்றால் குளிர்விக்கப்படும் 2V சிங்கிள் – சிலிண்டர் 440சிசி ‘டார்க்X’ இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது, 27 bhp @ 6000 rpm ஆற்றலையும் மற்றும் 36 Nm @ 4000 rpm என்ற முறுக்குவிசையையும் (டார்க்) வழங்குகிறது. நெருக்கடி மிக்க நகர்ப்புற சாலைகளிலும் மற்றும் நெடுஞ்சாலைகளிலும் மேற்கொள்ளப்படும் பயணங்களின்போது மிருதுவான மற்றும் அழுத்தம் ஏற்படுத்தாத சவாரியை உறுதிசெய்யும் வகையில் ஹை லோ – எண்டு டார்க் உடன் இந்த இன்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது. செயல்திறனைப் பொறுத்தவரை 6 வேக டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் மேவ்ரிக் 440 – ல் பொருத்தப்பட்டிருக்கிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும் 0° ஸ்டீல் ரேடியல் பேட்டர்ன் டயர்கள், வளைவுகளிலும், திருப்பங்களிலும் பாதுகாப்பான நிலைப்புத்தன்மையையும், ஆதரவையும் உறுதி செய்கிறது.

சமரசம் செய்து கொள்ளாத சௌகரியம்
செங்குத்தாக அமர்ந்து பயணிக்கும் வடிவமைப்பு, தாராள இடவசதியுள்ள இருக்கை, சௌகரியமான லெக்ரூம் மற்றும் ஓட்டுனர் மற்றும் உடன் பயணியின் வசதிக்காக கிராப் – ரெயில்கள் என ரோட்ஸ்டர் வாகனத்திற்கான அம்சங்கள் இந்த மோட்டார்சைக்கிளில் இடம்பெற்றுள்ளன. அகலமான ஹேண்டில்பார்கள், வசதியான பிடிமானத்தை தருகின்றன. பணிச்சூழலியல் ரீதியில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஓட்டுனருக்கான இருக்கை, சௌகரியமான அனுபவத்தை உறுதி செய்கிறது. 17 அங்குல சக்தி வாய்ந்த சக்கரங்கள் மற்றும் 175 மி.மீ. கிரவுண்டு கிளியரன்ஸ் ஆகியவற்றை கொண்டிருக்கும் மேவ்ரிக் 440 சாலையில் அழுத்தமான பிடிமானத்துடன் பாதுகாப்பாகவும், விரைவாகவும் பயணிக்கும் திறன்களில் உயர்நேர்த்தியை வெளிப்படுத்துகிறது.

இன்டராக்டிவ் டெலிமேட்டிக்ஸ் அம்சங்கள்
இதில் பொருத்தப்பட்டுள்ள நெகட்டிவ் டிஸ்பிளே அம்சத்துடன் கூடிய டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், தெளிவாகப் பார்க்கும் திறனையும் மற்றும் நேவிகேஷனையும் வழங்குகிறது. இதன் ஸ்மார்ட்போன் அம்சங்கள் கூடுதல் சௌகரியத்தை உறுதி செய்கின்றன. eSIM அடிப்படையிலான இணைப்புவசதி, நிகழ்நேர தகவலையும், தொலைதூரத்திலிருந்து தடமறியும் திறனையும் வழங்குகிறது. அத்துடன், கனெக்டட் 2.0 தொழில்நுட்பத்தின் வழியாக, 35-க்கும் அதிகமான செயல்பாடுகளுக்கான அணுகுவசதியைத் தருகிறது.
********

ஹீரோ மோட்டோகார்ப் மீது அதிக தகவலுக்கு: ஊடகத் தொடர்பிற்கு:
corporate.communication@heromotocorp.com