November 8, 2024
  • November 8, 2024
Breaking News
March 21, 2024

ப்ளூ ஸ்டார் அறிமுகப்படுத்தும் புதிய வரம்பிலான டீப் ஃப்ரீசர்கள்

By 0 546 Views

ப்ளூ ஸ்டார் நிறுவனம், 60 முதல் 600 லிட்டர்கள் வரையிலான ஆற்றல் திறன் கொண்ட டீப் ஃப்ரீசர்களின் ஒரு புதிய வரம்பை அறிமுகப்படுத்துகிறது

சென்னை – மார்ச் 20, 2024: ப்ளூ ஸ்டார் லிமிடெட், பல்வேறு பயன்பாடுகளுக்கான ஒரு பரந்த அளவிலான வாடிக்கையாளர் பிரிவுகளைப் பூர்த்தி செய்வதற்காக, 60 முதல் 600 லிட்டர்கள் வரையிலான திறன்களில் மாறுபட்ட ஆற்றல்-திறனுள்ள மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த டீப் ஃப்ரீசர்களின் ஒரு விரிவான புதிய வரம்பின் அறிமுகத்தை அறிவித்தது.

2024 ஆண்டிற்கான டீப் ஃப்ரீசர்களின் புதிய வரம்பு

இந்த புதிய வரம்பு டீப் ஃப்ரீசர்கள் அதிக கொள்ளளவு, மேம்படுத்தப்பட்ட குளிரூட்டும் திறன் மற்றும் திறமையான குளிரூட்டலுக்கு அதிக வெப்ப பரிமாற்றத்தை உறுதி செய்கின்ற சிறந்த தொழில்நுட்பங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், அவை உகந்த சீதோஷ்ண நிலைக்கேற்றவாறு உள்ளன மற்றும் 47℃ சுற்றுப்புற வெப்பநிலைகளிலும் வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இன்னும் ஒரு சில அம்சங்களில், ஸ்மார்ட் ஐ மற்றும் LED லைட் கொண்ட சதுர வடிவமைப்பு ஆகியவற்றுடன் பரந்த அளவிலான நேர்த்தியான கண்ட்ரோல் பேனல்கள், நான்கு பக்கங்களில் இருந்து சீரான மற்றும் உகந்த குளிர்ச்சியை உறுதி செய்யும் Quadracool தொழில்நுட்பம் மற்றும் 160V முதல் 270V வரையிலான பரந்த இயக்க மின்னழுத்த வரம்பு ஆகியவை அடங்கும். ஒரு பரந்த அளவிலான சேமிப்புத் திறன்களுடன், மற்றவைகளின் மத்தியில் பால் மற்றும் ஐஸ்கிரீம், உறைந்த உணவுகள், உணவகங்கள், கன்வீனியன்ஸ் ஸ்டோர்கள், விருந்தோம்பல் மற்றும் பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றின் பயன்பாடுகளுக்கான ஒரு பரந்த வாடிக்கையாளர் பிரிவை பூர்த்தி செய்யும் ஒரு நிலைப்பாட்டில் இந்த நிறுவனம் உள்ளது.

இந்த டீப் ஃப்ரீசர்கள் ஒரு கவர்ச்சிகரமான விலையில் ரூ.16,000/- முதல் தொடங்குகின்றன.
மேக் இன் இந்தியா’ உத்தியை வலுப்படுத்துதல்
இந்த முழு அளவிலான டீப் ஃப்ரீஸர்களும், ‘மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி குளோப்’ முயற்சியில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகின்ற வகையில், இப்போது வாடா வில் உள்ள புளூ ஸ்டார் நிறுவனத்தின் நவீன உற்பத்தித் தொழிற்சாலையில் முழுமையாக தயாரிக்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வாடாவில் உள்ள இந்த புதிய ஆலை, 300 முதல் 600 லிட்டர்கள் வரையிலான டீப் ஃப்ரீஸர்களை உற்பத்தி செய்ய நிர்மாணம் செய்யப்பட்டது. மேலும் நடப்பு நிதியாண்டில், 60 லிட்டரில் இருந்து தொடங்கும் முழு வரம்பையும் தயாரிக்க ஒரு கூடுதல் மூலதன செலவுகள் செய்யப்பட்டன. இந்த தொழிற்சாலை சமீபத்திய தன்னியக்க தொழில்நுட்பங்களுடன் நன்கு பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் டீப் ஃப்ரீஸர்களுக்கான BIS சான்றிதழையும் பெற்றுள்ளது. இந்த புதிய ஆலை, 3 இலட்சம் டீப் ஃப்ரீசர்கள் மற்றும் 1 இலட்சம் வாட்டர் கூலர்கள் ஆகியவற்றின் ஒரு நிறுவப்பட்ட தற்போதைய உற்பத்தி திறனைக் கொண்டுள்ளது. வாடா தொழிற்சாலையைத் தவிர, அகமதாபாத் ஆலை டீப் ஃப்ரீசர்களின் உற்பத்திக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

 

குளிர் உணர்திறன் பொருட்களின் விநியோகம் மற்றும் தீர்வுகள்
டீப் ஃப்ரீஸர்களைத் தவிர, இந்த நிறுவனம் நாட்டில் அதிகரித்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக அதன் வணிகக் குளிர்பதன வணிகத்தை வளர்க்கும் லட்சியத் திட்டங்களைக் கொண்டுள்ளது. 80 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு செழுமையான பாரம்பரியம் மற்றும் நிபுணத்துவ கள அறிவுடன், தோட்டக்கலை, மலர் வளர்ப்பு, வாழைப்பழம் பழுக்கவைத்தல், பால், ஐஸ்கிரீம், கோழி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், விரைவு சேவை உணவகங்கள், HoReCa, பட்டு வளர்ப்பு, கடல், மருந்து மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் பூர்த்தி செய்யும் குளிர் பதனப் பொருட்களின் விநியோகத் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகள் அடங்கிய ஒரு பரந்த போர்ட்ஃபோலியோவை புளூ ஸ்டார் உருவாக்கியுள்ளது.

புளூ ஸ்டார் நிறுவனத்தின் அதன் குளிர்பதன பொருட்கள் மற்றும் தீர்வுகளுக்கான மதிப்பு முன்மொழிவு ‘வாழ்க்கை மேம்படுத்துதல்’ ஆகும். இந்த தயாரிப்புகள் மற்றும் தீர்வுகள், அழிந்துபோகக்கூடிய பொருட்களின் ஆயுட்காலத்தை நீட்டித்தல் மற்றும் குளிர் உணர்திறன் பொருட்களின் விநியோக செயல்பாட்டின் போது விரயத்தை குறைத்தல் ஆகியவற்றின் மூலம் உற்பத்தியைப் பாதுகாக்கவும், சேமிப்புக் காலம் முழுவதும் செயல்திறன், புத்துணர்ச்சி மற்றும் சுவையைத் தக்கவைத்துக்கொள்ளவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த தயாரிப்புகள் பல்வேறு வகைகளாகவும் தீர்வுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன:
வணிக விற்பனைத் தீர்வுகள், டீப் ஃப்ரீசர்கள், பாட்டில் குளிரூட்டிகள், விசி கூலர்கள் போன்ற தயாரிப்புகள் மற்றும் மல்டிடெக் குளிர்விப்பான்கள்/ஃப்ரீசர்கள், பேஸ்ட்ரி கேபினட்கள், சாக்லேட் கூலர்கள் மற்றும் நிமிர்ந்த ஃப்ரீசர்கள், போன்ற பல்பொருள் அங்காடி குளிர்பதன உபகரணங்களை வழங்குகின்றன.

நீர் விநியோக தீர்வுகளில் சேமிப்பு நீர் குளிரூட்டிகள் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர் விநியோகிப்பான்கள் ஆகியவை அடங்கும். மேலும், வணிக சமையலறை குளிர்பதன தீர்வுகளில் ரீச்-இன் கூலர்கள்/ஃப்ரீசர்கள், அண்டர்கவுண்டர்கள், சாலடெட்டுகள், பேக் பார் குளிர்விப்பான்கள், பிளாஸ்ட் ஃப்ரீசர்கள் மற்றும் ஐஸ் க்யூப் மேக்கர்ஸ் போன்ற தயாரிப்புகள் அடங்கும். சமீபத்தில், இந்த நிறுவனம் எடிட்ஸ் மினிபார்களின் வரம்பையும் அறிமுகப்படுத்தியது.

ஒருங்கிணைந்த குளிர் அறை தீர்வுகள், ஹெர்மெடிக், செமி ஹெர்மெடிக் மற்றும் ரேக் குளிர்பதன அமைப்புகளுடன் கூடிய முன்-தயாரிக்கப்பட்ட PUF இன்சுலேட்டட் பேனல்களை உருவாக்கியுள்ளது. இன்வெர்ட்டர் அடிப்படையிலான-தொழில்நுட்ப குளிர்பதன தயாரிப்புகள் கிடங்கு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரிவுகளுக்கான குளிர் உணர்திறன் பொருட்களின் விநியோக தீர்வுகள் மற்றும் இந்த வகையில் அதன் போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்த IoT அமைப்புகளையும் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கூடுதலாக, சுகாதார குளிர்பதன தீர்வுகள், இரத்த வங்கி குளிர்சாதன பெட்டிகள், ஐஸ்-லைன்ட் குளிர்சாதன பெட்டிகள் (+2°C முதல் +8°C வரை), மருத்துவ உறைவிப்பான்கள் (-20°C வரை), மருந்து குளிர்சாதன பெட்டிகள் (+2°C முதல் +8°C வரை)மிகக் குறைந்த வெப்பநிலை ஃப்ரீஸர்கள் (-86°C), தடுப்பூசி டிரான்ஸ்போர்ட்டர்கள் (+8°C முதல் -20°C வரை) மற்றும் சவக்கிடங்கு அறைகள் போன்ற தயாரிப்புகளை வழங்குகிறது.

நிலையான தொழில்நுட்பங்கள்
புளூ ஸ்டார், குறைந்த GWP குளிர்பதனப் பொருட்கள் மற்றும் இன்சுலேஷன் ப்ளோயிங் ஏஜெண்டுகளைப் பயன்படுத்தி நிலையான தயாரிப்புகளைத் தயாரிக்க சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்தியாவில் அதன் வகையில் முதலான தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. நிறுவனம் அதன் அதிநவீன பசுமையான தொழில்நுட்பங்களை பின்பற்றுவதற்காக இந்திய அரசாங்கத்தால் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.

R & D உள்கட்டமைப்பு

புளூ ஸ்டார் நிறுவனம் R&D உள்கட்டமைப்பு மற்றும் வளங்களில் தனது முதலீட்டை விரைவுபடுத்தியுள்ளது மற்றும் அதன் R&D வசதிகள், NABL-அங்கீகரிக்கப்பட்ட டீப் ஃப்ரீசர் சோதனை ஆய்வகங்கள் மற்றும் AHRI-சான்றளிக்கப்பட்ட சோதனை ஆய்வகங்கள் உட்பட தேவையான அனைத்து சோதனை ஆய்வகங்களையும் உள்ளடக்கியுள்ளது. இந்த நிறுவனம் பல காப்புரிமைகள் மற்றும் வடிவமைப்பு பதிவுகளைப் பெற்றுள்ளது, இன்னும் பல வரிசையில் உள்ளன. அதன் வலுவான R&D அமைப்பின் ஆதரவு மூலம் புளூ ஸ்டார் தனது புதிய தயாரிப்பு மேம்பாடுகளில் உலகம் முழுவதும் உள்ள சமீபத்திய தொழில்நுட்பங்களை இணைத்து வருகிறது.

விநியோகம் மற்றும் சேவை வலையமைப்பை விரிவுபடுத்துதல்

ப்ளூ ஸ்டார் இன் 2100 விற்பனை மற்றும் சேவை சேனல் கூட்டாளர்கள் 900 நகரங்களில் குளிர்பதன பொருட்கள் மற்றும் தீர்வுகளை விற்கவும் , நிறுவவும் மற்றும் பராமரிக்கவும் பயிற்சி பெற்றுள்ளனர். இந்த நிறுவனம் அதன் சேனல் கூட்டாளிகள் மற்றும் அவர்களின் பரந்த குழுக்களின் திறனை வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தொடர்ந்து முதலீடு செய்கிறது.

வாடிக்கையாளர் சேவையில், ப்ளூ ஸ்டார் நிறுவனம்,விற்பனைக்கு பிந்தைய ஏர் கண்டிஷனிங் மற்றும் கமர்ஷியல் ரெஃப்ரிஜெரேசன் ஆகியவற்றில் நாட்டின் முன்னணி ISO-சான்றளிக்கப்பட்ட சேவை வழங்குநராக உள்ளது. அதன் கோல்ட் ஸ்டாண்டர்ட் திட்டத்தின் மூலம் இந்த நிறுவனம் 24×7 வாடிக்கையாளர் கால் சென்டர் நிபுணர்கள், சர்வீஸ் ஆன் வீல்ஸ், மொபைல் பயன்பாடுகள் மற்றும் தொழில்நுட்பத் திறனை இந்தியா முழுவதும் வழங்குகிறது. புளூ ஸ்டார் இன் உள்கட்டமைப்பின் மற்றொரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் குளிரூட்டப்பட்ட வேன்கள் கிடைப்பது ஆகும்.

இவை அழிந்துபோகக்கூடிய பொருட்களை சேமிக்க வாடிக்கையாளர் வளாகத்தில் தற்காலிகமாக பயன்படுத்தப்படலாம். சேவை உள்கட்டமைப்பு மற்றும் CRM மென்பொருளை உருவாக்குவதில் இந்த நிறுவனம் குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்து வருகிறது.

எதிர்கால வாய்ப்புக்கள்
புளூ ஸ்டார் லிமிடெட் நிர்வாக இயக்குநர் B தியாகராஜன் மேலும் கூறுகையில், “வணிகக் குளிர்பதனத் துறையில் ஒரு முன்னணியாளராகவும் அழிந்துபோகும் பொருட்களைப் பாதுகாத்தல் மற்றும் ஆயுட்காலம் நீட்டிப்பதில் எங்களின் நிரூபிக்கப்பட்ட கள நிபுணத்துவத்துடன், பழங்கள், காய்கறிகள், இறைச்சி, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, மலர் வளர்ப்பு, பால், உறைந்த உணவு, மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பட்டுத் தொழிலுக்கான சிறப்பு பயன்பாடுகள் உட்பட பல பொருட்களின் பல்வேறு பல்வேறு பயன்பாடுகளுக்கான மதிப்புச் சங்கிலியை உள்ளடக்கிய ஒரு பரந்த அளவிலான வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் சேவை செய்கிறோம்.

வணிக குளிர்பதனம் மற்றும் குளிர் உணர்வு திறன் பொருட்களுக்கான விநியோக தீர்வுகளுக்கான இந்த சந்தையானது, வரும் ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சிக்கு தயாராக உள்ளது, மேலும் ஒரு புதிய மற்றும் புதுமையான ஆற்றல் திறன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளின் வரம்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் எங்கள் நிலையை மேலும் பலப்படுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.”என்று கூறினார்.

கூடுதல் தகவலுக்கு, தொடர்பு கொள்ளவும்:

கிரீஷ் ஹிங்கோரணி, துணைத் தலைவர் – சந்தைப்படுத்தல் (கூலிங் அண்ட் பியூரிஃபிகேஷன் அப்பளையன்சஸ்) & கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ், புளூ ஸ்டார் லிமிடெட்.
மின்னஞ்சல்: girishhingorani@bluestarindia.com
+91 22 66684000/ +91 9820415919
DyutikaSingaravelan
Adfactors PR
டியுடிகா சிங்காரவேலன்
ஆட்ஃபாக்டர்ஸ் PR மின்னஞ்சல் :
Dyutika.s@adfactorspr.com
+91 7449045666