January 21, 2025
  • January 21, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அஜித் படத்தை இயக்குவதாக நம்பப்பட்ட வினோத் அலறுகிறார்
November 15, 2018

அஜித் படத்தை இயக்குவதாக நம்பப்பட்ட வினோத் அலறுகிறார்

By 0 1197 Views

அஜித்தின் அடுத்த படத்தை (தல 59) ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ உள்ளிட்ட வெற்றி பெற்ற படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அவர் இயக்கும் படம் ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் என்று ஒரு பக்கமும், புதிய கதை என்று இன்னொரு பக்கமும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இது ஒரு புறமிருக்க எச்.வினோத் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில் இருந்து “தல 59 படம் ரீமேக் இல்லை…” என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்கும் விதமாக எச்.வினோத் அளித்துள்ள விளக்கம் –

“பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த சமூக வலைதளங்களிலும் எனக்கு கணக்கு இல்லை. எனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும். மற்றபடி என் பெயர் மூலம் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். 

ஆக, அவரும் முற்றாக மறுக்கவில்லை. தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என்றுதான் சொல்கிறார். பார்க்கலாம்..!