December 3, 2023
  • December 3, 2023
Breaking News
January 25, 2023

குடியரசு தின தேநீர் விழாவில் பங்கெடுக்க முதல்வரை அழைத்த கவர்னர்

By 0 258 Views

இந்தியா முழுவதும் 74வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதியும், மாநிலங்களில் கவர்னரும் கொடியேற்றுவர்.

தமிழ்நாட்டில் நடைபெறும் குடியரசு தின விழாவில், கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். இதையடுத்து நாளை கவர்னர் மாளிகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த விருந்தில் பங்கேற்க அனைத்து கட்சியினருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், திமுக கூட்டணியை சேர்ந்த சில கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக கூறி உள்ளன.

இந்நிலையில், நாளை நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.