கோத்ரேஜ் இன் புதிய மேட்ரிக்ஸ் லாக்கர், AccuGold மற்றும் SmartFog ஆகியவற்றுடன், சென்னை மேம்பட்ட பாதுகாப்பை மேற்கொள்கிறது
வீடு மற்றும் நிறுவனப் பாதுகாப்பில் முதன்மையான முன்னேற்றங்கள் பற்றிய ஒரு கவனத்துடன், கோத்ரேஜ் செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ், செக்யூர் 4.0 ஐ அறிமுகப்படுத்துகிறது
சென்னை, ஆகஸ்ட் 18, 2023: கோத்ரேஜ் குழுமத்தின் முதன்மை நிறுவனமான கோத்ரேஜ் & பாய்ஸ் இன் ஒரு பிரிவான கோத்ரேஜ் செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ், சென்னையில் நடந்த செக்யூர் 4.0 நிகழ்வில் தங்களின் சமீபத்திய கண்டுபிடிப்புகளை வெளியிட்டது. இந்த முன்னணி பாதுகாப்பு தீர்வுகள் பிராண்ட், வீடு மற்றும் நிறுவனப் பாதுகாப்பில் அதிநவீன முன்னேற்றங்களைக் காட்சிப்படுத்தியது. இது சிறப்பான மற்றும் புதுமைக்கான அதன் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, நவீன டிஜிட்டல் ஒருங்கிணைப்புடன் பாரம்பரிய பாதுகாப்பின் இணைவை எடுத்துக்காட்டுகின்ற ஒரு நவீன பாதுகாப்பு தீர்வான I Warn உடன் புதிய மேட்ரிக்ஸ் லாக்கர் இன் அறிமுகப்படுத்தல் இருந்தது. இந்த புதிய மேட்ரிக்ஸ் லாக்கரின் இந்த யோசனையானது, ஒரு பிரீமியம் வடிவமைப்பை வெளிப்படுத்தி, அழகியலையும் மேம்படுத்தி, மேம்பட்ட காட்சி நேர்த்தியைக் கொண்ட ஒரு லாக்கர் விருப்பத்திற்கான அவர்களின் ஏக்கத்தை திறம்பட பூர்த்தி செய்கிறது மட்டுமல்லாமல் ஒரு வீட்டு சேமிப்பு தீர்வுக்கான நுகர்வோரின் விருப்பத்தை அங்கீகரிப்பதில் இருந்து உருவானது. இந்த மேம்பட்ட ஹோம் லாக்கர், இன்றைய மாறி வரும் சூழலில் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. இது I-Warn சென்சார் ஐக் கொண்டுள்ளது. இது அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது லாக்கர்களை சேதப்படுத்தும் போதெல்லாம் வீட்டு உரிமையாளர்களை எச்சரிக்கும் ஒரு கூடுதல் பாதுகாப்பு அடுக்கு ஆகும்.
ஆண்டுக்கு 15% என்ற ஈர்க்கக்கூடிய கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் (CAGR) வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றான சென்னையின் நற்பெயரைக் கருத்தில் கொண்டு, இந்த பிராண்ட் அதன் இருப்பை, குறிப்பாக நகை வியாபாரி சமூகத்திற்குள் விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்த செக்யூர் 4.0 நிகழ்வானது, விரிவான பாதுகாப்புத் தீர்வுகளுடன், I warn உடன் கூடிய மேட்ரிக்ஸ் லாக்கர் உட்பட பாதுகாப்பின் ஒரு கூடுதல் அடுக்கைச் சேர்த்து, ஊடுருவும் நபர்களை அவர்களின் பாதையில் தடுத்து நிறுத்த வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு சக்திவாய்ந்த மறைவான பாதுகாப்பு அமைப்பான ‘SmartFog’ போன்ற புரட்சிகரமான தொழில்நுட்பத்துடன் கூடிய புதுமைகளின் ஒரு வகையை காட்சிப்படுத்தியது. கூடுதலாக, கோத்ரேஜ் செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ், தங்கத்தின் தூய்மையை மிகத் துல்லியமாகத் தீர்மானிக்கும் தங்கப் பரிசோதனை இயந்திரமான “AccuGold” ஐயும் அறிமுகப்படுத்தியது.
கோத்ரேஜ் செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ் இன் வணிகத் தலைவர் திரு. புஷ்கர் கோகலே, வளர்ந்து வரும் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிலையான கண்டுபிடிப்புக்கான பிராண்டின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். அவர் கூறும்பொழுது, “கோத்ரேஜ் செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ் இல் எங்கள் பயணம், புதுமைக்கான கள் அர்ப்பணிப்பு மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களின் மாறிவரும் பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ப பயனுள்ள தீர்வுகளை வழங்குவதன் மூலம் வரையறுக்கப்படுகிறது. ‘புதிய மேட்ரிக்ஸ் ஹோம் லாக்கர் உடன் கூடிய I – warn அலாரம் அமைப்பு’,’Smart Fogintegration’ மற்றும் ‘Accugold’ தங்கத் தூய்மை சோதனை இயந்திரங்களின் இந்த அறிமுகம், பாதுகாப்புத் தீர்வுகளில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. நாங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கணிசமான அளவு முதலீடு செய்துள்ளோம், இது நிறுவனங்கள் மற்றும் வீடுகள் இரண்டின் பாதுகாப்பையும் மேம்படுத்தும் அதிநவீன தீர்வுகளை அறிமுகப்படுத்த அனுமதிக்கிறது. எங்களின் செக்யூர் 4.0 முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் புரட்சிகரமான தயாரிப்புகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இவை எங்கள் ஜூவல்லர்கள் உட்பட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இணையற்ற பாதுகாப்புடனும் மன அமைதியுடனும் அதிகாரம் அளிக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.”என்று கூறினார்.
நிறுவனப் பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய சந்தையாக சென்னையின் எழுச்சி ஆனது, குறிப்பாக நகைக்கடை சமூகத்திற்குள் அவர்களின் கணிசமான தங்க இருப்பு காரணமாக, கவனிக்கப்படாமல் போகவில்லை. கோத்ரேஜ் செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ், அதன் வலுவான சேவை உள்கட்டமைப்பு, சேனல் கூட்டாளர்களின் விரிவான வலையமைப்பு மற்றும் சென்னையின் பல்வேறு மூலைகளுக்கு சேவை செய்யும் அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநர்கள் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் அதன் வகையில் சிறந்த விற்பனைக்குப் பிந்தைய சேவையில் பெருமை கொள்கிறது. I warn உடன் கூடிய புதிய மேட்ரிக்ஸ் லாக்கர், Smart Fog மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவையில் ஒரு வலுவான முக்கியத்துவம் ஆகிய இந்த மூன்று புதுமையான வழங்கல்கள் சென்னையின் வேகமாக விரிவடைந்து வரும் நிறுவன மற்றும் வீட்டுப் பாதுகாப்புத் துறைகளில் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல உதவும் என்று இந்த நிறுவனம் நம்புகிறது.
திரு. கோகலே, காப்பீட்டுக் கோரிக்கைகளை மையமாகக் கொண்ட ஒரு தொடர்ச்சியானவிழிப்புணர்வு பிரச்சாரத்தை மேலும் வெளிப்படுத்தினார். பல வணிகங்கள் தங்கள் காப்பீட்டுத் திட்டங்களின் கவரேஜ் விதிகள் மற்றும் விலக்குகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை இன்சூரன்ஸ் பாலிசிகள், குறிப்பாக காப்பீட்டு நிறுவனங்கள் சேஃப்க்குள் வைக்கப்படாத எந்தப் பணத்தையும் காப்பீடு செய்யாது என்ற உண்மையை அவர் வலியுறுத்தினார். பணத்தை சேமிக்க லாக்கரை வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் இல்லையெனில் பணம் திருடப்பட்டால் காப்பீட்டு நிறுவனத்தால் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார். தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கும், அபாயங்களைக் குறைப்பதற்கும் மற்றும் அவர்களின் நிதி நலன்களை திறம்பட பாதுகாப்பதற்கும் தேவையான அறிவுடன் வணிகங்களை சித்தப்படுத்துவதை இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கண்டுபிடிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான ஒரு அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன், கோத்ரேஜ் செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ் தொழில் தரங்களை தொடர்ந்து மறுவரையறை செய்து வருகிறது. Secure 4.0 என்பது, வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், கிடைக்கக்கூடிய சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்கு பயனர்களை ஊக்குவிப்பதற்கும் இந்த நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கிறது.
தயாரிப்பு போர்ட்ஃபோலியோ:
இந்த புதிய மேட்ரிக்ஸ் லாக்கர், KeyLock மற்றும் Digital Lock வகைகளை வழங்கும் கைவினைத்திறன் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒரு உச்சமாக உள்ளது. இந்த Key Lock மாறுபாடு ஒரு புரட்சிகர Dual Control Lock ஐ அறிமுகப்படுத்துகிறது, அதே நேரத்தில் டிஜிட்டல் லாக் பதிப்பு பயனர் குறியீடு, முதன்மை குறியீடு மற்றும் ஒரு அத்தியாவசிய ஓவர்ரைடு கீ உள்ளிட்ட பாதுகாப்பு விருப்பங்களின் ஒரு வரிசையை வழங்குகிறது. இந்த இரட்டை அடுக்கு பாதுகாப்பு, தனிப்பயனாக்கக்கூடிய கடினமான கண்ணாடி அலமாரிக மற்றும் அதிநவீன விளக்குகள் ஆகியவற்றைக் கொண்ட, உன்னிப்பாக வடிவமைக்கப்பட்ட உட்புறத்தை அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே அணுக முடியும் என்பதை உறுதி செய்கிறது. ஒரு கவசத் தகட்டை உள்ளடக்கிய இரட்டை சுவர் பாதுகாப்புடன், மேட்ரிக்ஸ் லாக்கர் வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒரு ஊடுருவ முடியாத பாதுகாப்பை உருவாக்குகிறது. ஆட்டோ ஃப்ரீஸ் அம்சமானது, மீண்டும் மீண்டும் தோல்வியடைந்த முயற்சிகளுக்குப் பிறகு அணுகலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதன் மூலம் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. GSM Module, External Hooter, மற்றும் I-Warn ஆகியவற்றுடன் அதன் இணக்கத்தன்மை தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப ஒரு விரிவான தனிப்பயனாக்கக்கூடிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்குகிறது, இது மேட்ரிக்ஸ் லாக்கர் ஐ பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டின் உண்மையான உருவகமாக மாற்றுகிறது. இந்த I-Warn சென்சார் ஒரு கூடுதல் பாதுகா அடுக்காக செயல்படுகிறது, ஏதேனும் அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது லாக்கர்களை சேதப்படுத்தினால் வீட்டு உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கிறது.
Smart Fog என்பது இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வகையின் முதல் கருத்துரு ஆகும். இது ஊடுருவும் நபர்களை திறம்பட நிறுத்துகின்ற ஒரு புத்திசாலித்தனமான மறைவான பாதுகாப்பு அமைப்பாகும். இந்த புரட்சிகரமான தயாரிப்பு, நகைக்கடைக்காரர்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பிற்கு ஒரு கூடுதல் பாதுகாப்பை சேர்க்கிறது. எந்தவொரு பெட்டகத்தையும் அல்லது லாக்கரையும் திறக்கும் அங்கீகரிக்கப்படாத முயற்சிகளைக் கண்டறிய இது மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது ரிமோட் கிளவுட் அடிப்படையிலான பயன்பாடு அதோடு கூட அமைப்பை செயல்படுத்துவதற்கான வயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. தூண்டப்படும் போது, Smart Fog செறிவூட்டப்பட்ட திரவமாக்கப்பட்ட கிளைகோலால் ஆன ஒரு தடித்த மூடுபனியை வெளியிடுகிறது, இது மனிதர்களுக்கு பாதிப்பில்லாதது, ஆனால் பீதியை உண்டாக்கும் மற்றும் பூஜ்ஜியத் தெரிவுநிலை காரணமாக குற்றவாளியை அசைய விடாத திறன் கொண்டது. இது தளத்தில் உள்ள பணியாளர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க போதுமான நேரத்தை அனுமதிக்கிறது.
Accugold என்பது தங்கத்தின் தூய்மையை மிக மிகத் துல்லியமாக தீர்மானிக்க கோத்ரேஜ் வழங்கும் தங்க சோதனை இயந்திரம் ஆகும். இந்த இயந்திரம், ஆபரணத்தை சேதப்படுத்தாமல், சோதனையில் உள்ள ஆபரணத்தின் கலவையை உங்களுக்கு வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு நகை வியாபாரியாக இருந்தாலும், ஒரு வங்கியாக இருந்தாலும் அல்லது ஒரு நிதி நிறுவனமாக இருந்தாலும், இந்த இயந்திரம் உங்கள் வணிகத்திற்கு சரியான கூடுதலாக இருக்கும்.
கோத்ரேஜ் செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ் பற்றி:
கோத்ரேஜ் செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ் என்பது கோத்ரேஜ் & பாய்ஸ் மெனுபாக்சரிங் லிமிடெட் மற்றும் 4.1 பில்லியன் டாலர் கோத்ரேஜ் குழுமத்தின் ஒரு பிரிவாகும். வணிகத்தில் ஒரு முன்னோடியான மற்றும் முன்னணியான, கோத்ரேஜ் செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ் பிரிவு, இந்தியாவில் பாதுகாப்பு தீர்வுகளின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் சந்தைப்படுத்துபவர் ஆவர். இது, பல மதிப்புமிக்க வங்கி, கார்ப்பரேட் மற்றும் பொது நிறுவனங்களுக்கு பாதுகாப்பு தீர்வுகளை வழங்கும் மிகப்பெரிய வழங்குநர் ஆகும். இந்த வகை மற்றும் இந்த தொழில்துறையில் முதன்முறையாக, கோத்ரேஜ் பாதுகாப்பு தீர்வுகள் பிரிவுக்கு சூப்பர் பிராண்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. வீட்டுப் பிரிவில் “மிகவும் விருப்பமான பிராண்ட்” விருதையும் வென்றுள்ளது. இப்பிரிவு தற்போது மத்திய கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, தூர கிழக்கு ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சார்க் நாடுகள் உட்பட 45 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அதன் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது.