November 25, 2024
  • November 25, 2024
Breaking News
June 1, 2023

இதய அடைப்புக்கான (CTO) நவீன சிகிச்சை மீதான பயிலரங்கு 2023

By 0 301 Views

இதயக்குழாய் சிகிச்சையின் தரத்தை உயர்த்துவதில் உறுதி கொண்டிருக்கும் இந்தியா மற்றும் ஜப்பானின் மருத்துவ நிபுணர்கள்

ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் பயிலரங்கை நடத்துவதன் மூலம் மருத்துவ கல்வியை புரட்சிகரமாக மாற்றும் மிகச்சிறப்பான முயற்சி

Chennai, 1st June 2023 : நாட்பட்ட முழுமையான இதய அடைப்புக்கான (CTO) நவீன சிகிச்சை மீதான பயிலரங்கு 2023 மே 31 மற்றும் ஜுன் 1 ஆகிய இரு நாட்களில் புரோமெட் மருத்துவமனையில் நடைபெற்றது. இந்தியாவின் APCTO கிளப் இயக்குனர் டாக்டர். அருண் கல்யாணசுந்தரம் மற்றும் ஜப்பானின் APCTO கிளப் இயக்குனர் டாக்டர். வட்டாரு நகாமட்சு ஆகியோர் இப்பிரத்யேக பயிலரங்கை சிறப்பாக நடத்தினர். உலகெங்கிலுமிருந்து திறன்மிக்க 10 இதய மருத்துவர்கள் மட்டுமே இந்த பயிலரங்கில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாட்பட்ட முழுமையான இதய அடைப்பு பிரச்சனையை சரிசெய்ய நவீன உத்திகளை இம்மருத்துவர்களுக்கு கற்பிப்பதில் இந்த பயிலரங்கு கவனம் செலுத்தியது.
மலேசியா, நேபாளம், மாலத்தீவு போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். சிடிஓ – க்கான சிகிச்சையில் மேம்பட்ட பயிற்சியைப் பெற உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தகுதி வாய்ந்த மருத்துவர்களுக்கு மட்டுமே இந்த பயிலரங்கு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இதில் பங்கேற்கும் மருத்துவர்கள், தாங்கள் பெறும் நிபுணத்துவத்தை அவர்களது நாடுகளிலுள்ள பிற மருத்துவர்களுக்கு வழங்க முடியும். இதன்மூலம் உலகளவில் இதய நோயால் அவதியுறுகின்ற ஆயிரக்கணக்கான நோயாளிகள் பயனடைவார்கள்.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவத்துடன், 500-க்கும் அதிகமான இதய இடையீட்டு சிகிச்சை செயல்முறைகளை (PCI) செய்திருக்கும் இதய மருத்துவர்கள் இப்பயிலரங்கிற்காக தேர்வுசெய்யப்பட்டனர். தங்களது திறன்களை மேலும் மேம்படுத்திக்கொள்வது மீது பேரார்வமும், அர்ப்பணிப்பும் கொண்டிருக்கின்ற மருத்துவர்கள் மட்டுமே இப்பயிற்சியில் இடம்பெறுவது உறுதி செய்யப்படுகிறது.

அதிக எண்ணிக்கையிலான நபர்கள் இடம்பெறும் வழக்கமான பெரிய பயிலரங்கைவிட குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் இடம்பெறும் இப்பயிலரங்கு மிகவும் சிறப்பான பலன்களை தருகிறது.

இதில் நான்கு நபர்களுக்கு செய்யப்பட்ட அறுவைசிகிச்சை நிகழ்வுகளை நேரில் காணும் அரிய வாய்ப்பு பங்கேற்பாளர்களுக்கு கிடைத்தது.

CTO LIVE AID நிகழ்வை நெறிப்படுத்திய டாக்டர். அருண் கல்யாணசுந்தரம் அவர்களின் கலந்துரையாடலை மிக அருகில் நேரடியாக காண்பதற்கு பங்கேற்பாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. கூடுதலாக, ஜப்பான் மற்றும் பெல்ஜியம் நாடுகளில் நடைபெற்ற இரு சிக்கலான சிடிஓ சிகிச்சை செயல்முறைகளை டாக்டர். அருண் கல்யாணசுந்தரம் விளக்கிக் கூறினார்.

உலகளவில் அதிக கௌரவம் மிக்க இந்நிகழ்வில் நெறியாளராக செயல்பட இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட ஒரே மருத்துவ நிபுணர் டாக்டர். அருண் கல்யாணசுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிலரங்கின் ஒவ்வொரு பங்கேற்பாளரும் தங்களது நோயாளிகளின் நிலைமையை பற்றி விரிவாக விவாதிக்கவும், அவர்களுக்கான சிகிச்சை உத்திகளை வகுக்கவும் ஒரு நல்ல வாய்ப்பாக இந்நிகழ்வு அமைந்தது.

எளிதான, நன்கு புரியக்கூடிய வழிமுறையில் சிகிச்சைக்கான முக்கியத் திறன்களை கற்றுக்கொள்ள உதவிய பாடத்திட்டம் குறித்து பங்கேற்பாளர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். பயிற்சியளித்த நிபுணர்களது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக பங்கேற்பாளர்களை தேர்வு செய்யும் கடுமையான செயல்முறை திகழ்கிறது.

திறமையான, நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்களிடமிருந்து மிக உயர்ந்த தரத்திலான சிகிச்சையை நோயாளிகள் பெறுவதை இந்த பயிலரங்கு உறுதி செய்திருக்கிறது.

நோயாளிகளின் நிலைமை குறித்த மீளாய்வுகள், இடையீட்டு சிகிச்சைக்கான திட்டமிடல், கற்பித்தல் அமர்வுகள், நேரடியாக சிகிச்சை செயல்முறையை கண்காணித்தல் மற்றும் உத்வேகமளிக்கின்ற ஒரு இரவு உணவு கருத்தரங்கு ஆகியவை இந்த பயிலரங்கில் இடம்பெற்ற பல்வேறு செயல்பாடுகளில் சிலவாகும். விரிவான கற்றல் அனுபவத்தை இச்செயல்பாடுகள் பங்கேற்பாளர்களுக்கு வழங்குவதோடு, சக மருத்துவர்கள் மத்தியில் அறிவார்ந்த தகவலை பகிர்ந்து கொள்கின்ற சூழலையும் உருவாக்குகிறது.

“புரோமெட் மருத்துவமனையில் புதுமையான பயிலரங்கை நடத்துவதில் நாங்கள் பெரும் உற்சாகம் கொண்டிருக்கிறோம். உலகெங்கிலுமிருந்து வளர்ந்து வரும் இதயவியல் மருத்துவர்களை இதில் பங்கேற்கச் செய்வதன் வழியாக, உலகெங்கிலும் சிடிஓ மருத்துவ செயல்முறைகளை புரட்சிகரமாக மாற்றுவதே எங்களது நோக்கமாகும்.

சிக்கலான பிரச்சனைகளை சமாளிக்க தேவைப்படும் திறமைகளையும், அறிவையும் மருத்துவர்களுக்கு வழங்கி அதன்மூலம் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையை அளிப்பதே எமது இலக்காகும்,” என்று டாக்டர். அருண் கல்யாணசுந்தரம் விளக்கமளித்தார்.

டாக்டர். வட்டாரு நகாமட்சு பேசுகையில், “உலகெங்கிலும் இதய நோய்கள் அதிகரித்து வருவதை நாம் கண்டு வருகிறோம். சிக்கலான இதய நோய்களுக்கு சிகிச்சையளிக்க திறன்மிக்க மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். மருத்துவத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஜப்பான் முதன்மை வகிக்கிறது. சிடிஓ – ல் உலகளவில் அங்கீகாரம் பெற்ற டாக்டர். அருண் கல்யாணசுந்தரம் அவர்களுடன் செயல்பட வாய்ப்பு கிடைத்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

உலகெங்கிலுமுள்ள இதயவியல் மருத்துவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக ஓய்வின்றி உழைக்கும் டாக்டர். அருண் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு இத்தருணத்தில் எமது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று குறிப்பிட்டார்.