January 15, 2025
  • January 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 800 படத்தில் முத்தையா முரளிதரனாக யார் நடிக்கிறார் தெரியுமா..?
April 17, 2023

800 படத்தில் முத்தையா முரளிதரனாக யார் நடிக்கிறார் தெரியுமா..?

By 0 312 Views

மூவி டிரெயின் மோஷன் பிக்சர்ஸ் வழங்கும் இயக்குநர் எம்.எஸ். ஸ்ரீபதி இயக்கத்தில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘800’ படத்தின் முதல் பார்வை அவரது பிறந்தநாளில் வெளியாகிறது…

கிரிக்கெட் உலகில் ஊக்கமளிக்கும் மற்றும் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவரான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், தனது ஒப்பற்ற விளையாட்டுத் திறமையால் அனைவரையும் மகிழ்விக்க தவறியதில்லை. மூவி டிரையின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த பல்துறை கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு ‘800’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் முதல் பார்வை அவரது பிறந்தநாளான ஏப்ரல் 17 அன்று வெளியாக இருக்கிறது.

‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாகவும், மஹிமா நம்பியார் மதிமலராகவும் நடிக்கின்றனர். இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் அசோசியேட் இயக்குநராக இருந்தவரும், ‘கனிமொழி’ (2010) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவருமான ஸ்ரீபதி, தற்போது ‘800’ படத்தின் மூலம் மீண்டும் இயக்கத்திற்கு திரும்பி உள்ளார்.

இலங்கை, சென்னை, கொச்சி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு இதன் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தை மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்திருக்க விவேக் ரங்காச்சாரி இணைந்து தயாரித்துள்ளார்.

 

நடிகர்கள்:

மதுர் மிட்டல்,
மகிமா நம்பியார்,
நரேன்,
நாசர்,
வேல ராமமூர்த்தி,
ரித்விகா,
வடிவுக்கரசி,
அருள் தாஸ்,
ஹரி கிருஷ்ணன்,
யோக் ஜேபி,
சரத் ​​லோஹிதாஷ்வா

தொழில்நுட்ப குழு

  1. எழுத்து & இயக்கம்: எம்.எஸ். ஸ்ரீபதி,
    ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர் ஐ.எஸ்.சி,
    இசை: ஜிப்ரான்,
    எடிட்டர்: பிரவீன் கே.எல்,
    தயாரிப்பு வடிவமைப்பாளர்: விதேஷ்,
    ஆடை வடிவமைப்பாளர்கள்: பூர்தி பிரவின் & விபின் PR
    தோற்ற வடிவமைப்பாளர்கள்: அனிதா மட்கர் & கௌரவ்