April 26, 2024
  • April 26, 2024
Breaking News
November 12, 2022

ஃபிக்கி டேன்கேர் 2022- சுகாதார துறை மாநாடு மற்றும் சுகாதார துறை விருதுகள்

By 0 300 Views

ஃபிக்கி டேன்கேர் மையப் பொருள்: தமிழ்நாடு சுகாதார துறையின் சூழல் ஒருங்கிணைப்பு – தமிழக அரசின் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய தொலைநோக்குத் திட்டம் 

சென்னை, நவம்பர் 12, 2022: ஃபிக்கி டேன்கேர் 2022 – ஃபிக்கி டேன்கேரின் 14 ஆவது சுகாதார துறை மாநாடு மற்றும் சுகாதார துறை விருதுகள் வழங்கும் விழா சுகாதார துறை அமைப்புகள், அரசு நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் சென்னையில் சனிக்கிழமை ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்திரா சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சுகாதாரம், மருத்துவக் கல்வி, குடும்ப நலத்துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை முதன்மைச் செயலாளர் திரு பி.செந்தில்குமார், இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) தமிழ்நாடு பிரிவு தலைவரும், டிரிவிட்ரான் – நியூபெர்க் குழும நிறுவனங்களின் தலைவர், மேலாண்மை இயக்குநருமான டாக்டர் திரு ஜி.எஸ்.கே.வேலு, ஃபிக்கி மேலாண்மை திட்டங்களின் தலைவரும், ஃபிக்கி சுகாதார பிரிவின் இயக்குநருமான திரு பூபேஷ் நாகராஜன், ஒருங்கிணைப்பாளரும், எம்.ஜி.எம். மருத்துவமனை இயக்குநர் திரு டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாநாட்டில் அரசு அதிகாரிகள், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பிரபல மருத்துவர்கள், மருத்துமனை மேம்பாட்டாளர்கள், நிர்வாகத்தினர் மற்றும் காப்பீடு, மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி பிரிவு, புத்தாக்க பிரிவு, மருத்துவ தொழில்நுட்பம், மருந்தியல், மருத்துவ நுகர்பொருட்கள் உற்பத்தியாளர்கள், சுகாதார துறை ஆலோசகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சுகாதார துறை விருதுகளை வழங்கி அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் பேசியது:

தமிழ்நாடு மருத்துவ சேவைகளை வழங்கி வருவதில் எப்போதும் முன்னணியில் உள்ளது. மருத்துவத்துறையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தீர்வு காண்பதில் அரசு, தனியார் மற்றும் இதர சுகாதார துறைகளை சேர்ந்தவர்கள் பல்வேறு புதிய சாதனைகளை தடம் பதித்து வருகின்றனர். மருத்துவத்துறையில் புத்தாக்க நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) வருவதை முழு மனதுடன் வரவேற்கிறது. தமிழ்நாடு சுகாதார துறை ஃபிக்கியுடன் இணைந்து புத்தாக்க நிறுவனங்களின் மையங்கள் (இன்குபேட்டர்கள்), வணிக பங்குதாரர்கள் உள்ளிட்டவைகளுன் ஒருங்கிணைந்து சுகாதார துறை புத்தாக்க நிறுவனங்களுக்கான ஒருங்கிணைந்த சூழல் அமைப்பை விரைவாக நிறுவ உள்ளது என்றார்.

ஃபிக்கி குழுமங்களின் தமிழ்நாடு பிரிவு தலைவரும், டிரிவிட்ரான்-நியூபெர்க் தலைவருமான டாக்டர் ஜி. எஸ். கே. வேலு பேசியது:

“கொரோனா கொள்ளை தொற்று நோய் மருத்துவத்துறையில் நம்மை பலப்படுத்தியும், மேம்படுத்தியும், ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்து கொண்டு செயல்பட செய்துள்ளது. மேலும் எல்லைகளை கடந்து ஒன்றிணைந்து, தடையின்றி மருத்துவ சேவை வழங்கி வருகிறோம். ஃபிக்கி சுகாதார துறை விருதுகள் பல்வேறு நிறுவனங்கள், தனி நபர்கள் சவாலான நேரங்களில் மாநிலத்தின் சுகாதார பாதுகாப்பில் எழுச்சியை வழங்கும் விதமாக பணிபுரிந்ததை அங்கீகரிக்கிறது என்றார்.

மாநாட்டில் சுகாதாரம், நோயறிதல், வாழ்க்கை அறிவியல், மருத்துவ சாதனங்கள் (மலிவு விலை), ஆயுஷ் பிரிவுகள், உடற்தகுதி, விளையாட்டு மற்றும் மனநலம் உள்பட பிரிவுகளுக்கு 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புத்தாக்க நிறுவனங்களாக விண்ணப்பித்துள்ளன.

ஃபிக்கி டேன்கேரின் 14 ஆவது மாநாட்டில் ஃபிக்கி தமிழ்நாடு சுகாதார பிரிவின் ஒருங்கிணைப்பாளரும், எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையின் இயக்குநருமான டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன் பேசியது:

ஃபிக்கி விருதுகள் மருத்துவத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக புதுமை, விளைவு, சீரான என்ற மூன்று அளவுகோல்களை மதிப்பீடாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் மற்றும் தனி நிபர்களின் மருத்துவ சேவையின் செயல்திறனை என்பது விருது வழங்குவது பங்களிப்பை அங்கீகரித்து துரிதப்படுத்துதல், அனைவருக்கும் ஏற்ற மற்றும் மேம்பட்ட செயல்பாடுகளை சுகாதார துறையில் தொடர்ந்து வழங்குவது முக்கியமாகும்.

ஃபிக்கி அமைப்பு அரசு அமைப்புகள் மற்றும் இதர வணிக பங்குதாரர்களுடன் இணைந்து தமிழ்நாடு புத்தாக்க நிறுவனங்களின் பதிவை ஊக்குவிக்கவும் பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.

ஃபிக்கி டேன்கேர் ஹெல்த்கேர் விருதுகள் 2022: (அரசு)

1. ஃபிக்கி டேன்கேர் சிறந்த மாவட்ட மருத்துவமனை விருது: அரசு பொது மருத்துவமனை, காஞ்சிபுரம்.

2. ஃபிக்கி டேன்கேர் சிறந்த கல்வி வழங்கும் மருத்துவமனை விருது: சென்னை மருத்துவக் கல்லூரி – ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை.

3.ஃபிக்கி டேன்கேர் சிறப்பு அங்கீகார விருது: டாக்டர் ஆர். காந்திமதி, தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர்.

 

ஃபிக்கி டேன்கேர் ஹெல்த்கேர் விருதுகள் 2022: (தனியார் மற்றும் நிறுவனங்கள்)

1. ஃபிக்கி டேன்கேர் வாழ்நாள் சாதனையாளர் விருது: காமேஸ்வரன், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர். சென்னை காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி அறக்கட்டளை.

2. : ஃபிக்கி டேன்கேர் தனியார் லாப நோக்கற்ற மருத்துவமனை விருது – சங்கரா கண் மருத்துவமனை, சென்னை.

3. ஃபிக்கி டேன்கேர் வளர்ந்து வரும் சிறந்த மருத்துவமனை விருது: ஃபோர்ட்டிஸ் ஹெல்த்கேர், வடபழனி.

4. ஃபிக்கி (தமிழ்நாடு டேன்கேர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை மண்டலம்) விருது: மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை.

5. ஃபிக்கி டேன்கேர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை (சென்னை)எம்.ஜி.எம். ஹெல்த்கேர், சென்னை.

6. ஃபிக்கி டேன்கேர் சிறந்த நோயறிதல் மையம் விருது: நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ், சென்னை.

7. ஃபிக்கி டேன்கேர் சிறந்த இன்சூரன்ஸ் நிறுவனம் விருது: ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் அலைட் இன்சூரன்ஸ் லிமிடெட், சென்னை.

8. ஃபிக்கி டேன்கேர் சிறந்த மருத்துவ உபகரண நிறுவனம் விருது: டிரிவிட்ரான் ஹெல்த்கேர், சென்னை.

9. ஃபிக்கி டேன்கேர் சிறந்த பார்மா நிறுவனம் விருது: ஃபோர்ட்ஸ் இந்தியா லேபராட்டரிஸ் லிமிடெட், சென்னை.

ஃபிக்கி டேன்கேர் சிறந்த புத்தாக்க நிறுவனங்கள் விருது 2022 (ஸ்டார்ட் அப்)

1. ஃபிக்கி டேன்கேர் சிறந்த புத்தாக்க நிறுவனம் விருது: மோசிரோ ஹெல்த், மெடிசிஸம் வி.ஆர். எம்ஆர்எம்இடி.இன்.