April 26, 2024
  • April 26, 2024
Breaking News
August 29, 2022

குரோம்பேட்டையில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தொடக்கம்

By 0 577 Views

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையால் ஏற்பாடு செய்யப்பட்ட கண் தான பரப்புரை செயல்திட்டத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டிய நடிகர் ஆர்.ஜே. பாலாஜி செப்டம்பர் 30 வரை கண் மருத்துவரிடம் இலவச கலந்தாலோசனையைப் பெறலாம்.

சென்னை, 29 ஆகஸ்ட் 2022: 1957 ஆம் ஆண்டிலிருந்து கண் பராமரிப்பு சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற முன்னோடி என அறியப்படும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, சென்னையில் குரோம்பேட்டையில் ஒரு மிக நவீன கண் சிகிச்சை மருத்துவமனையை தொடங்கி வைத்தார். இத்தொடக்கவிழா நிகழ்வில் பிரபல நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தலைமை விருந்தினராக பங்கேற்றதோடு, கண் தானம் என்ற உன்னதமான குறிக்கோளுக்கு தனது மனமார்ந்த ஆதரவையும், தனது உரையில் வெளிப்படுத்தினார். டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் மற்றும் முதுநிலை கண் நிபுணர் டாக்டர். ஸ்ரீனிவாசன் ஜி. ராவ் மற்றும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, குரோம்பேட்டை மற்றும் மருத்துவ சேவைகளின் தலைவர் டாக்டர். S. வெங்கடேஷ் ஆகியோரும் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

குரோம்பேட்டை மருத்துவமனையானது, குரோம்பேட்டை பேருந்து நிலையத்திற்கு பின்புறத்தில் எண்.201, ஜிஎஸ்டி சாலை, முதல்தளம் என்ற முகவரியில் 9000 சதுரஅடி என்ற மிகப்பரந்த அமைவிடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. குரோம்பேட்டை மருத்துவமனையில் 2022 செப்டம்பர் 30 வரை, மக்களுக்கு இலவச கண் மருத்துவ கலந்தாலோசனை திட்டம் வழங்கப்படுவதையும் இத்தொடக்கவிழாவையொட்டி டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை அறிவித்திருக்கிறது.

இந்நிகழ்வின்போது நடிகர் ஆர்ஜே பாலாஜி கூறியதாவது “குரோம்பேட்டையில் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் புதிய மருத்துவ மையத்தை தொடங்கி வைப்பது எனக்கு அளவிலா மகிழ்ச்சியை தருகிறது. நமது உடலில் மிக முக்கியமான, அதிக வளர்ச்சி பெற்ற புலனுறுப்பாக இருப்பது நமது கண்களே. ஆனால், பார்வைத்திறன் இழந்தவர்களாக இருப்பதால் இந்த அழகான உலகையும், இயற்கை அதிசயத்தையும் காண்பதற்கான தங்களது வாய்ப்பை பல நபர்கள் இழந்து தவிக்கின்றனர். எனினும், இறப்புக்குப் பிறகு நமது கண்களை தானமாக வழங்குவதன் மூலம், பார்வைத்திறனின்றி பரிதவிக்கும் அவர்களுக்கு பார்வைத்திறனை வழங்குவது சாத்தியம். ஆகவே, தங்களது கண்களை இறப்பிற்கு பிறகு தானமாக வழங்க ஒவ்வொருவரும் ஆர்வத்தோடு முன்வந்து அதற்கான வாக்குறுதியை வழங்க வேண்டுமென்று ஒவ்வொருவரையும் நான் வலியுறுத்தி வேண்டி கேட்டுக்கொள்கிறேன். யாரோ ஒருவரது வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க உதவுவதற்கு இந்த உன்னதமான செயல் நடவடிக்கை உதவும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.”

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் மற்றும் முதுநிலை கண் நிபுணர் டாக்டர். ஸ்ரீனிவாசன் ஜி. ராவ் இந்நிகழ்வில் கூறியதாவது: “சென்னையில் முக்கிய வர்த்தக அமைவிடமாக வளர்ந்திருக்கும் குரோம்பேட்டையில் எமது மிக நவீன கண் மருத்துவமனையை அதிக பெருமையோடு நாங்கள் தொடங்கியிருக்கிறோம். தற்போது சென்னை மாநகரில் மட்டும் 17 கண் மருத்துவ மையங்களை நாங்கள் நடத்தி வருகிறோம். இந்த மையம் தொடங்கப்பட்டிருப்பதன் மூலம், இந்தியாவெங்கிலும் மற்றும் ஆப்ரிக்காவிலும் பல்வேறு இடங்களில் 119 மருத்துவமனைகளை மொத்தத்தில் உள்ளடக்கிய ஒரு மாபெரும் வலையமைப்பை நாங்கள் கொண்டிருக்கிறோம். கண் பராமரிப்பு சிகிச்சையில் அதிகரித்து வரும் தேவைகளை இன்னும் சிறப்பாக பூர்த்தி செய்வதற்காக எமது வலையமைப்பையும், செயல்பாடுகளையும் இன்னும் விரிவாக்கம் செய்வதில் நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம். இந்த வலையமைப்பில் உள்ளடங்கிய மருத்துவமனைகளின் எண்ணிக்கையை 2022-23-க்கும் 150 என்ற நிலைக்கு உயர்த்துவதே எமது திட்டமாகும்.”

“கண் தானம் பற்றிய விழிப்புணர்வை பரப்பவும் மற்றும் இறப்பிற்குப் பிறகு தங்களது கண்களை தானம் செய்வதற்கான வாக்குறுதியை வழங்க மக்களுக்கு ஊக்குவிக்கவும், ஆகஸ்ட் 25 – ம் தேதி முதல் செப்டம்பர் 8 – ம் தேதி வரை தேசிய அளவிலான கண் தான இருவார கால அனுசரிப்பு மேற்கொள்ளப்படுகிறது. உலகளவில் பார்வைத்திறன் பாதிப்புள்ள மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். பார்வைத்திறன் குறைபாட்டுடன் ஏறக்குறைய 12 மில்லியன் நபர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். கண்புரை மற்றும் கண் அழுத்த நோய்க்குப் பிறகு பார்வையிழப்பிற்கான முக்கிய காரணங்களாக இருப்பவை கண் விழிப்படல நோய்கள். தங்களது இறப்பிற்குப் பிறகு தங்களது கண்களை தானமாக செய்ய மக்களுக்கு முன்வரவிடாமல் தடுக்கிறது. எந்தவொரு நபரும் அவரது கண்ணை தானம் செய்ய உறுதி ஏற்கலாம். பாலினம், வயது அல்லது இரத்தப்பிரிவு என எதுவாக இருப்பினும், யார் வேண்டுமானால், அவர்களது இறப்பிற்கு பிறகு கண்ணை தானமாக வழங்க முடியும்.” என்று டாக்டர். ஸ்ரீனிவாசன் ஜி. ராவ் மேலும் விளக்கமளித்தார்.

குரோம்பேட்டை டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை துறையின் தலைவர் டாக்டர். S. வெங்கடேஷ் இதுபற்றி பேசுகையில், “இப்புதிய மருத்துவமனையில் மாட்யூலர் அறுவைசிகிச்சை அரங்கு, துல்லிய கண்புரை சிகிச்சை சாதனம் மற்றும் விழித்திரை OT போன்றவற்றை சிறந்த அறுவைசிகிச்சை சார்ந்த சிகிச்சைகளை வழங்குவதற்கு நவீன, சமீபத்திய அறுவைசிகிச்சை வசதிகளும் நிறுவப்பட்டிருக்கின்றன.

பரிசோதனையகங்கள், மருந்தகம் மற்றும் பல்வேறு முன்னணி பிராண்டுகள் தயாரித்து வழங்கும் உயர்தரமான லென்ஸ்கள் மற்றும் பிரேம்களின் விரிவான தொகுப்பை வழங்குவதற்கு கண் கண்ணாடிகள் பிரிவு ஆகியவையும் இம்மருத்துவம இடம்பெற்றிருக்கும் பிற வசதிகளாகும். கண்விழிப்படல புண்கள், கணவிழிப்படலத்தின் அழற்சி, கண்விழிப்படலம் மெலிதல் மற்றும் ஒவ்வாமைகள் ஆகியவை உட்பட, விழிப்ப பாதிப்பு நிலைகளுக்கு சிகிச்சையளிக்க அனைத்து திறன்களையும், வசதிகளையும் நாங்கள் கொண்டிருக்கிறோம். எமது விழித்திரை சிறப்பு சிகிச்சை நிபுணர்கள், விழிப்புள்ளி சிதைவு. நிறப்புலன் மறைதல் வீக்கம், விழித்திரை விலகல் மற்றும் நீரிழிவின் காரணமாக ஏற்படும் விழித்திரை அழிவுநோய் உட்பட விழித்திரை சார்ந்த மற்றும் விழிப்புள்ளி நோய்களுக்கு நிபுணத்துவம்மிக்க நோயறிதல் சோதனை மற்றும் உயர் சிகிச்சையை வழங்குகின்றனர்.” என்று கூறினார்.

நிகழ்ச்சியில் தன் கண்களை தானமாக வழங்கினார் ஆர் ஜே பாலாஜி.