September 16, 2025
  • September 16, 2025
Breaking News
January 24, 2020

இயக்குனர் சுசீந்திரன் விபத்தில் சிக்கினார்

By 0 678 Views

தமிழ் பட உலகில் தனக்கென தனியிடம் கொண்டவர் இயக்குனர் சுசீந்திரன். சமீபத்தில் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி சாம்பியன் படத்தை எடுததிருந்தார்.

இன்று காலை டைரக்டர் சுசீந்தரன் நடைப்பயிற்சியின் போது அவர் மீது வாகனம் ஒன்று மோதி கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

அதனால் உடனடியாக அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு எலும்பு முறிவுக்கான லேசர் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.

சுசீந்திரன் மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்க  வேண்டியிருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.