January 1, 2026
  • January 1, 2026
Breaking News
November 14, 2021

செங்கோட்டை இயக்குனர் சசிகுமார் திடீர் மரணம்

அர்ஜூன் நடித்த ‘செங்கோட்டை’ படத்தை இயக்கிய இயக்குநர் சி.வி.சசிகுமார் இன்று சென்னையில் காலமானார்.

போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையில் கேன்சருக்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலையில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமாகிவிட்டார்.

1996ம் ஆண்டு வெளியான படம் ‘செங்கோட்டை’.அர்ஜூன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா,ரம்பா ஆகியோர் நடித்திருந்தனர்.

அதற்குப்பின் அவருக்குப் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனால் தனது நட்பு வட்டாரத்தில் நிறைய பேருக்கு கதை, திரைக்கதை எழுதித்தந்தவராக அவரது நண்பர்களால் அறியப்படுகிறார். பின்னர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் வெளியான ‘மகாபாரதம்’தொடரின் ஒரு சில எபிசோடுகளை இயக்கியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன் கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.