April 19, 2025
  • April 19, 2025
Breaking News
December 4, 2019

தர்பார் இசை வெளியீடு ரஜினி என்ன செய்யப் போகிறார்

By 0 861 Views

லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் முதல் லுக், இரண்டாம் லுக் போஸ்டர்கள் மற்றும் ‘சும்மா கிழி’ சிங்கிள் வெளியான நிலையில் இப்போது படத்தின் பாடல்கள் வெளியீடு குறித்த அறிவிப்பு வந்திருக்கிறது.

வரும் 7-ம் தேதி நாள் குறிக்கப்பட்டிருக்கும் இசைவிழா மிக பிரமாண்டமான முறையில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கிறது. அனிருத் இசையில் அமைந்த படத்தொய்ன் பாடல்கள் அன்று ரசிகர்கள் புடைசூழ வெளியாகவிருக்கின்றன.

பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக ரஜினி தன் கட்சி பற்றி அறிவிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர் அறிவிப்பாரா அல்லது வழக்கம்போல் ஏதாவது எதிர்பார்ப்பை ஏற்றிவிட்டு அடுத்த படம் வரை தள்ளிப்போடுவாரா என்று இன்னும் இரு தினங்களில் தெரிந்துவிடும்…!