வரலாற்றில் இன்று ( 26.11. 1949) இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட தினம்.
அண்ணல் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் 300 நிபுணர்கள் கொண்ட அரசியல் அமைப்பு குழுவால் (Constitutional Assembly) உருவாக்காப்பட்ட இந்த அரசியல் அமைப்பு சட்டம் பின்னர் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு அமலுக்கு வந்த நாள்தான் 1950 ஜனவரி 26ம் நாள்!
இது தான் இதுவரை உலக நாடுகளில் எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும்.
இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 94 திருத்தங்கள், 465 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. இது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ இந்தி மொழிபெயர்ப்பினையும் கொண்டுள்ளது.
எண்ணற்ற ஜாதிகள், சமயங்கள், மொழிப்பிரிவு மக்கள் வாழும் இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடிய ஒரு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கவேண்டிய பிரம்மாண்டமான பணியை சிறப்பாக செய்து முடித்த அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான அந்த குழுவின் மகத்தான, திறம்பட்ட பணியினை நினைவு கூர்ந்து போற்றுவோம்.