August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பாம்பு பிடித்த சிம்பு மீது புகார் – வைரல் வீடியோவால் வழக்கு பாயுமா?
November 3, 2020

பாம்பு பிடித்த சிம்பு மீது புகார் – வைரல் வீடியோவால் வழக்கு பாயுமா?

By 0 665 Views

நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார். கிராமத்து பின்னணியில் செண்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்து உருவாகி வரும் இப்படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறார் சிம்பு. 

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தை படமாக்கி வரும் படக்குழு ஒரே கட்டமாக ஷூட்டிங்கை முடிக்கவும் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் நடிகர் சிம்பு தனது தோளில் பாம்புடன் தோன்றியிருந்தார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது

தற்போது ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன. அதில், சிம்பு உயிருடன் உள்ள பாம்பை மரத்தில் இருந்து பிடித்து சாக்குப்பையில் போடுவது போல காட்சி இடம்பெற்றுள்ளது.

வனவிலங்குகளை துன்புறுத்துவது குற்றம் என்பதால் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தை சிம்பு மீறியிருப்பதால் அவர் மீது உரிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.