*ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘லவ் மேரேஜ்’ படக்குழு* அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ‘லவ் மேரேஜ்’...
முட்டைகளை அடைகாத்தாலும் சிறகு விரித்த தன் குஞ்சுகளை ‘ பறந்து போ… உன் பாதையை நீயே தேடு..!’ என்றுதான் விட்டு விடுகிறது பறவை. மனிதன் மட்டுமே எப்போதும் தன் வாரிசுகள் மீது ஆளுமையை செலுத்தி வாழ்நாள் முழுதும் அடைகாத்துக் கொண்டே இருக்கிறான். இந்த தத்துவார்த்தமான விஷயத்தை இது ஒரு தத்துவம் என்று தெரியாமலேயே போகிற...
தீயிலிட்டு சாம்பலாக்கினாலும் அதிலிருந்து உயிர் பெற்று வரும் புராணகாலப் பறவையாக நம்பப்படுவது பீனிக்ஸ். அப்படி நசுக்க நசுக்க அதிலிருந்து உயிர்த்துக் கிளம்பும் ஒடுக்கப்பட்ட பிறவியாக இருக்கிறார் படத்தின் நாயகன் சூர்யா சேதுபதி. கதையின் களம் நாம் நன்கறிந்த வடசென்னைப் பகுதிதான். அதிலும் குத்துச்சண்டை பின்னணியை இன்னும் சில படங்களில் பார்த்திருக்கிறோம். எனவே விஜய் சேதுபதியின்...
இந்தியாவின் அடுத்த தொழில்முனைவோர் அலையை மேம்படுத்த சரக்கு போக்குவரத்தில் ஒரு புதிய சகாப்தத்தை அறிவிக்கிறது..! ஜூலை 03, 2025: இந்தியாவின் மிகப்பெரிய வணிக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், புதிய டாடா ஏஸ் ப்ரோவை அறிமுகப்படுத்துவதன் மூலம் சரக்கு போக்குவரத்தில் ஒரு புதிய மைல்கல்லை உருவாக்கி, சிறிய சரக்கு போக்குவரத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது....
குடிப்பழக்கத்தால் விளையும் தீமைகள் குறித்து அனேக படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், அதற்கெதிரான போராட்டத்தை முன்னிறுத்தி வந்த படங்கள் குறைவு. அந்த வகையில் தங்கள் கிராமத்தினர் வாழ்க்கையில் குடியேறி குடி கெடுத்த குடியை ஒழிக்க அந்த மண்ணின் மகள் குயிலி என்ன செய்தார் என்பதை பட்ஜெட்டுக்கு பங்கம் வராமல் தந்திருக்கிறார் இயக்குனர் பி.முருகசாமி. கொஞ்சமும் சினிமாத்தனம்...
படத்தின் தலைப்பே கதையைச் சொல்லி விடும். நடுத்தர வர்க்க மக்கள் பெரும்பாலானோரின் கனவு ஒரு சொந்த வீடு வாங்கி விட வேண்டும் என்பதுதான். அப்படி… மனைவி தேவயானி, மகன் சித்தார்த், மகள் மீதா ரகுநாத்துடன் வசதிகள் குறைந்த வாடகை வீட்டில் வசித்து வரும் நடுத்தர வர்க்கத்து சரத்குமாரின் கனவு மட்டுமல்லாமல் வாழ்க்கையின் லட்சியமே சொந்த...
படம் தொடங்கியதும் முரளி ராதாகிருஷ்ணன் ஒரு தற்கொலை முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. அதிலிருந்து சின்ன பிளாஷ்பேக் போனால் உழைப்பால் உயர்ந்த தொழிலதிபராக முரளி ராதாகிருஷ்ணன் இருக்கிறார். ஆனால் அவருக்கு காதல் உள்பட சுயநலம் எதுவும் இல்லை. இருந்தாலும் அவரிடம் வேலை செய்யும் நாயகி அவரை தொடர்ந்து காதலித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், எதையும் கண்டுகொள்ளாத முரளி...