July 13, 2025
  • July 13, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • படப்பிடிப்பில் விபத்து – சேரன் தலையில் எட்டு தையல்கள்
August 5, 2021

படப்பிடிப்பில் விபத்து – சேரன் தலையில் எட்டு தையல்கள்

By 0 545 Views

பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ஆனந்தம் விளையாடும் வீடு எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தெரிந்த விஷயம்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப் பிடிப்பில் நடந்த விபத்து பற்றிய செய்தி இப்போது வெளியாகி உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. வீடு ஒன்று இத்திரைப்படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது. அந்த வீட்டில் படப்பிடிப்பு நடந்த போது கால் இடறி விழுந்த சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. 

இதைத் தொடர்ந்து, சேரனின் தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டன. இருந்த போதிலும், படப்பிடிப்பை ரத்து செய்யமால் தொடர்ந்து தனது காட்சிகளை சேரன் நடித்துக் கொடுத்தாராம். 

அதுதான் அனுபவம் என்பது. அவர் ஓய்வு எடுக்க ஆரம்பித்திருந்தால் அவருக்காக மொத்த யூனிட்டும் காத்திருக்க வேண்டி இருக்கும். நல்லவேளையாக படப்பிடிப்பை தாமதமின்றி முடித்து விட்டார்கள்.

சேரன் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பியுள்ளனர்.