January 22, 2025
  • January 22, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் போனிகபூர் மீது பண மோசடி புகார்
June 24, 2019

நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் போனிகபூர் மீது பண மோசடி புகார்

By 0 775 Views

அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்து வரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் மீது ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூரில் உள்ள பிரதாப் நகர் காவல் நிலையத்தில் பிரவீன் ஷ்யாம் என்பவர் தயாரிப்பாளர் போனி கபூர் மீது கொடுத்துள்ள புகாரில் “நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துவதாக கூறி போனி கபூர் என்னிடம் ரூ.2.5 கோடி கடனாக பெற்றார். அதனைத் திரும்ப தரும்போது இரு மடங்காக தருவதாக கூறினார்.

ஆனால், தற்போது வரை நட்சத்திர கிரிக்கெட் போட்டியும் நடத்தவில்லை, எனது பணத்தையும் திரும்ப தரவில்லை..!” என்று தெரிவித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் பட்ட கடனுக்கு அவர் எடுத்து வெளியிடும் படத்தை நிறுத்தி சிக்கல் ஏற்படுத்தி தங்கள் பணத்தை வசூலிப்பது கடன் கொடுத்தவர்களின் வழக்கம்.

ஆகஸ்டில் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தை வெளியிடுவதாக முதலில் அறிவித்த போனிகபூர் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதால் அதனை முன்கூட்டியே வெளியிடும் திட்டத்திலிருக்கிறார். அதற்கு முன் இந்தக் கடன் விவகாரத்தை அவர் முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவது நல்லது.