December 12, 2024
  • December 12, 2024
Breaking News
  • Home
  • Uncategorized
  • பிறந்த நாளில் டான்ஸ் மாஸ்டருடன் சாயா சிங் போட்ட ஆட்டம் வீடியோ
May 20, 2020

பிறந்த நாளில் டான்ஸ் மாஸ்டருடன் சாயா சிங் போட்ட ஆட்டம் வீடியோ

By 0 647 Views

தனுஷுடன் ‘திருடா திருடி’ படத்தில் ஜோடியா நடித்தவர் சாயா சிங். இப்படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடலுக்கு இவர்கள் போட்ட ‘தெறி’ ஆட்டதாலும் படம் ஹிட் அடித்தது.

மேலும் இவர் தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’, விஷாலின் ‘ஆக்‌ஷன்’, அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.

இவருக்கு இந்த மாதம் 16-ம் தேதி பிறந்தநாள். லாக் டவுனும் அதுவுமாய் ரசிகர்களுக்கு என்ன பரிசு தரலாம் என்று யோசித்தவருக்கு ஒரு யோசனை உத்தித்தது.

அதன்படி மன்மத ராசா பாடலுக்கு நடனம் அமைத்த டான்ஸ் மாஸ்டர் சிவஷங்கருடன் ஆடிய டான்ஸ் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன் சிவஷங்கர் மாஸ்டரை பார்த்த போது எடுத்த வீடியோ இதுவாம்.

இந்த வீடியோ தனது பிறந்தநாள் ட்ரீட் -ட்டுன்னு சொல்லி பகிர்ந்து இருக்கார். அவரது ரசிகர்கள் இந்த பிறந்தநாள் பரிசால் மகிழ்ந்து போய் இருக்கிறார்கள். நீங்களும் பாருங்கள்…