January 10, 2025
  • January 10, 2025
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் ஜெர்மன் நிறுவனம் முந்துகிறது – பரிசோதனைக்கு தயார்

by by Jun 23, 2020 0

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ‘க்யூர்வேக்’ என்ற ( பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத ) நிறுவனம் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது செய்திகள் மூலம் தெரிய வருகிறது.

ஜெர்மானிய டியுபிங்கன் பல்கலைக்கழக மருத்துவமனையை சேர்ந்த ஆராய்ச்சியாளர் பீட்டர் கிரம்ஸ்னர் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடந்து வருகிறதாம்.

இந்த தடுப்பூசி உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாகவும், இதை  பரிசோதித்து பார்ப்பதற்காக, ஜெர்மன் மற்றும் பெல்ஜியத்தில் மொத்தம் 144 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிகிறது.

இன்னும் 2 மாதங்களில்…

Read More

எச்சரிக்கை ரிப்போர்ட் – வெஸ்டர்ன் டாய்லட் மூலம் கொரோனா பரவும்

by by Jun 17, 2020 0

மேற்கத்திய கழிவறை (western toilets) யின் மூலமும் கொரோனா நோய்த் தொற்று பரவலாம் என சீனாவில் உள்ள யாங்ஜோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நோய்த் தொற்றுள்ள ஒருவரின் செரிமான மண்டலத்தில் உயிர்வாழும் வைரஸ் அவர் கழிக்கும் மலத்தில் வழியாக பரவலாம் என்பதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளதாக செய்தி நிறுவனம் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்பியல் இதழில் ஒன்றில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, கணினி மாதிரிகள் பயன்படுத்தி ஒரு…

Read More

கொரோனா நோயாளிகள் மோசமாக கையாளப் படுகின்றனர் – உச்ச நீதி மன்றம்

by by Jun 12, 2020 0

இந்திய நாட்டின் தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே போகின்றது.

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, தமிழகத்தைத் தொடர்ந்து 3வது இடத்தில் உள்ள, டெல்லியில் இதுவரை 34687 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1085 பேர் மரணம் அடைந்துள்ளனர். 

இந்நிலையில், கொரோனா நோயாளிகளை கையாளும் விதம், உடல்களை அலட்சியமாக தூக்கிப் போடும் மனிதாபிமானமற்ற செயல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

அப்போது, கொரோனா நோயாளிகளை விலங்குகளை விட மோசமாக நடத்துவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

“கொரோனா…

Read More

வரலாற்றைத் திருத்தி சொல்லக்கூடிய அவசியம் எனக்கு இல்லை – அமீர்

by by Jun 12, 2020 0

அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு,
நம்மோடு வாழ்ந்து கொண்டிருந்த மனிதர் ஒருவர் மறைந்து விட்டால் அவரைப் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொள்வது மனித மாண்பு. அதுவே இன்று வரை நம் எல்லோராலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது.

அந்த வகையில் மறைந்த எம்எல்ஏ அண்ணன் ஜெ. அன்பழகனை நினைவு கூறும் விதமாக பல்வேறு நிகழ்வுகளை சொல்லிக்கொண்டிருக்கும் போது மேலதிகமாக மறைந்த எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் சென்னையில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டு பாண்டி பஜார் காவல் நிலையத்திலிருந்த தேசியத் தலைவர் பிரபாகரன்…

Read More

டிவி செய்தியாளர் வரதராஜன் வெளியிட்ட வைரல் வீடியோ – 4 பிரிவுகளில் வழக்கு

தொலைக்காட்சி செய்தியாளரும் நடிகருமான வரதராஜன் இன்று ஒரு காணொளியை வாட்ஸ் அப்பில் பரவ விட்ட வைரல் ஏற்படுத்தினார்.

அந்த காணொளியில் அவரது உறவினர் புரோனோ நோயினால் பாதிக்கப்பட்டதாகவும் அவரை அட்மிட் செய்வதற்கு பல மருத்துவ மனைகளுக்கு அலைந்தும் அவருக்கு படுக்கை வசதி இல்லாததால் அட்மிஷன் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக பிற்பகலில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் “வரதராஜன் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதிய இட வசதி இருக்கிறது. இதனால் தவறான…

Read More

உலக மக்கள் சேர்ந்து படித்த ஒரே பாடம் கொரோனாதான் – காமெடி சூரி சீரியஸ் பேச்சு

by by Jun 8, 2020 0

நகைச்சுவை நடிகர் சூரி அவர்கள் வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்.

“வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்” மற்றும் “மாற்றம் பவுண்டேஷன்” மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும், நடிகர் சூரி அவர்கள் முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்.அப்போது வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் மனிதாபிமான செயலை அவர் பாராட்டினார்.

நடிகர் சூரி பேசுகையில்,

“எனது அக்கா, தங்கைகளான திருநங்கையர்களுக்கும், எனது அண்ணன் தம்பிகளான மாற்றுதிறனாளிகளுக்கும் எனது வணக்கங்கள்.எல்லோரும்…

Read More

சென்னையில் சேவையைத் தொடங்கியது ஊபர் கால் டாக்சி

by by Jun 2, 2020 0

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி நாடு தழுவிய பொது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட தைத் தொடர்ந்து அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடங்கின.

கால் டாக்சி சேவையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஊபரும் சேவையை நிறுத்தியது.

மே மாதம் 25-ந்தேதி உள்நாட்டு விமான சேவையை மத்திய அரசு தொடங்கியதனால் விமான நிலையத்திற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே நேற்றில் இருந்து ஆட்டோ, கால் டாக்சி போன்றவை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையின் பல பகுதிகளில்…

Read More

காட்சி ஊடகங்களில் சாதி மத பிரச்சனை தென்பட்டால் புகார் அளிக்க வேண்டிய முகவரி

by by May 30, 2020 0

சமூக வலைதளங்கள், டிவிக்கள், மற்றும் ஒடிடி தலங்கள், ஆன்லைன் தொடர் உள்ளிட்டவற்றில், ஜாதி, மத துவேஷத்தை தூண்டும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பினால், அது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்க வேண்டிய முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஜீ 5 எனும் ஓடிடி தளத்தில் வெளியான ‘காட்மேன்’ டீசரில், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த தொடரை தடை செய்ய வலியுறுத்தி போலீசில்…

Read More

என் கதை திருடப்பட்ட அஜித் படம் – எழுத்தாளர் இந்துமதி கிளப்பி இருக்கும் சர்ச்சை

by by May 29, 2020 0

அகிலன் கண்ணன் அவர்கள் சித்திரப் பாவை பற்றி ஒரு பதிவிட்டிருந்தார். அதைப் படித்ததும் என் கதை திருடப்பட்டது ஞாபகத்திற்கு வந்தது. அதுவும் எப்பேர்ப்பட்ட கதை. இன்னும் கூட அனைவராலும் பாராட்டப் படும் கதை. படித்தவர்களால் மறக்க முடியாத கதை.

” தரையில் இறங்கும் விமானங்கள்.”
இதைப் போய் திருடி இருக்கிறார்கள். அதுவும் நான் மிகவும் மதிக்கும் அஜீத் அவர்கள் நடித்த படம்.
” முகவரி ”
என்ற பெயரில் படமாகியிருந்தது.

பின்னால் அஜீத்தின் சொந்தப் படம் என்று கூட சொன்னார்கள்.

கதை டிஸ்கஷன் போதே…

Read More

ரஜினியை தொடர்ந்து டிஸ்கவரி சேனலில் குரல் பதிக்கும் பிரகாஷ்ராஜ்

by by May 27, 2020 0

டிஸ்கவரி சேனல் தொலைக்காட்சி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ‘இன் டூ த வைல்ட் ‘ என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள்.   

அதுதான் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட ஒரு  ரியாலிட்டி நிகழ்ச்சி. அந்த எபிசோடும் பரவலான வரவேற்பைப் பெற்றது.

தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் அதே டிஸ்கவரியில் நிகழ்ச்சி ஒன்றிற்கு வர்ணனையாளராக மாறி இருக்கிறார்.

இது குறித்து அவர்’ இது ஓர் அர்த்தமுள்ள பயணம். இயற்கையின் குரலாக நான் மாறப்போகிறேன். இதுவரை இல்லாத அளவிற்கு…

Read More