May 4, 2024
  • May 4, 2024
Breaking News

Currently browsing அரசியல்

பிரதமர் மோடிக்கு வாங்கப்பட்டுள்ள அதி நவீன கார்கள் பற்றி அரசு விளக்கம்

by by Dec 30, 2021 0

பிரதமர் மோடி பயணிக்க ரூ.12 கோடி விலையில் இரண்டு ‘மெர்சிடிஸ் மேபேக் எஸ் 650 கார்டு’ ரக கார்கள் வாங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பற்றிய புதிய தகவல்களை மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று வெளியிட்டன.

அந்தத் தகவல்களில் இருந்து…

ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை விட வாங்கப்பட்டுள்ள கார்களின் விலை ஊடகங்கள் குறிப்பிட்டுள்ள விலையில் மூன்றில் ஒரு பங்குதான்.

எஸ்.பி.ஜி. (அதிரடி கமாண்டோ படை) பாதுகாப்பு வரையறையின்படி 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை…

Read More

பொள்ளாச்சி ஜெயராமன் மீது தாக்குதல் – எடப்பாடி பழனி்சாமி அறிக்கை

by by Dec 21, 2021 0

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிணத்துக்கடவு தாலுக்கா, கோதவாடி பஞ்சாயத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோதவாடி குளம் மற்றும் வரத்துக் கால்வாய், 2017-2018-ம் ஆண்டு குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், கிராம மக்களின் பங்களிப்புடன் தூர் வாரப்பட்டன.  

இந்த குளம் நேற்று நிரம்பியதை அடுத்து வருண பகவானுக்கு நன்றி…

Read More

அரசு ஊழியர்கள்தான் அரசாங்கம் – அரசு ஊழியர் மாநில மாநாட்டில் முக ஸ்டாலின்

by by Dec 19, 2021 0

அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14-வது மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதில் இருந்து…

“அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம். இல்லை என்றால் அரசாங்கமே இல்லை. அரசு ஊழியர்களுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் அரசு ஊழியர்களுக்காக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

அரசுக்கு கடும் நெருக்கடியான நிதிசூழல் இருப்பினும் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலனை கருத்தில் கொண்டு 1.1.2022 முதல் அகவிலைப்படி உயர்வு…

Read More

கோவிட் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படத்தை எதிர்த்து வழக்கு – கேரள உயர்நீதி மன்றம் தள்ளுபடி

by by Dec 13, 2021 0

கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழில்  பிரதமர் மோடியின் படம் இல்லாமல் சான்றிதழ் கிடைக்க வேண்டும் என்று கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் பீட்டர் மைலிபரம்பில் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,  அவர் நமது நாட்டின் பிரதமர், வேறு நாட்டின் பிரதமர் அல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்டதன் மூலம்  அவர் பிரதமராகி உள்ளார். உங்களுக்கு அரசியல் ரீதியான வேறுபாடுகள் இருக்கலாம் அதற்காக இதை நீங்கள் வலியுறுத்த முடியாது. …

Read More

ஒமிக்ரான் கொரோனா பரவல் – கவனமாக இருக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்

by by Nov 29, 2021 0

இந்திய பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதிலிருந்து…

1. இந்த குளிர்கால கூட்டத்தொடர் மிக முக்கியமானது.

2. நாட்டின் வளர்ச்சிக்கு புதிய பாதை உருவாக்க வேணடும்.
 
3. அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதில் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது.
 
4. குளிர்கால கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
 
5. புதிய வகை ஒமிக்ரான் கொரோனா பரவிவரும் நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Read More

குமரியில் முதல்வர் – வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரில் ஆய்வு

by by Nov 15, 2021 0

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாகவே மழை பெய்துவந்தது. 12-ந் தேதி முதல் மிக கனத்த மழை கொட்டியது. அன்று முதல் தொடர்ந்து பெய்த மழையால் நேற்று முன் தினம் மாவட்டமே வெள்ளக்காடானது.

 

200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டது. சுமார் 50 ஆயிரம் வீடுகளில் மழை நீர் புகுந்தது.

 

மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கால்வாய் எது? சாலை எது? என்று தெரியாத அளவுக்கு வெள்ளம் ஓடியது. குழித்துறை, தோவாளை, தேரேகால்புதூர், தக்கலை, குமாரபுரம், நித்திரவிளை, கோதையாறு,…

Read More

பைக்கில் பயணம் செய்து கோவாவில் ஆதரவு திரட்டும் ராகுல் காந்தி

by by Oct 30, 2021 0

அடுத்த ஆண்டு கோவா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்க, அதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. 

கோவாவில் ஆட்சியைப் பிடிப்பதில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக களமிறங்கி இருக்கிறது.
 
அதான் ஒரு கட்டமாக மம்தா பானர்ஜி கோவாவில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 
 
கோவாவில் தேர்தல் பணிகள் தொடங்கிய நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதல் முறையாக கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
 
இன்று பாம்போலிம் பகுதியில் இருந்து…

Read More

இல்லம் தேடி கல்வி ஒரு மிகப்பெரிய கல்விப் புரட்சி – முதல்வர் ஸ்டாலின்

by by Oct 27, 2021 0

மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்கவும், 1 முதல் 8-ம் வகுப்புகள் வரையான மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்காக ‘இல்லம் தேடி கல்வி’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதலியார்குப்பத்தில் இந்த புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின்படி மாணவர்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை…

Read More

செவிலியர்களாகிய உங்களுக்காக என் குரல் எப்போதும் ஒலிக்கும் – கமல்

by by Sep 28, 2021 0

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட சுமார் 3,000 செவிலியர்கள், தங்களின் பணி நிரந்தரம் கோரி, சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் இன்று (28.9.2021) மாலை 3 மணியளவில் போராட்டம் நடத்தினர்.

அறம் இருக்கும் இடத்தில் அன்பும் இருக்கும் என்பதற்கிணங்க, செவிலியர்களின் குரல்களுக்கு பலம் சேர்க்கும்விதமாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார். 

“ஓர் அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்ய வேண்டுமேயன்றி இருப்பவர்கள் வேலையைப் பறிக்கக்கூடாது. கொரோனா தொற்றின் வேகம் இன்னும் குறையாத நிலையில் செவிலியர்கள்…

Read More

சென்னை வந்த தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர் என் ரவிக்கு முதல்வர் வரவேற்பு

by by Sep 16, 2021 0

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி தமிழகத்தின் 14-வது கவர்னராக மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் பொறுப்பு ஏற்றார்.
 
இவர் பஞ்சாப் மாநில கவர்னராக சில தினங்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என். ரவி தமிழகத்தின் புதிய கவர்னராக அறிவிக்கப்பட்டார். 
 
இந்நிலையில் தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி இன்று தமிழகம் வந்தடைந்தார். டெல்லியில் இருந்து சென்னை வந்த அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு…

Read More