January 7, 2025
  • January 7, 2025
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

நான் சூர்யாவின் ரசிகை – ஹேமமாலினி மகள் ஈஷா தியோல்

by by Feb 24, 2021 0

பெரும்பாலான மக்களின் தலையாய பிரச்சனையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு தான். அந்தவகையில் அமெரிக்க, ஆரோப்பிய நாடுகளில் உடல் எடையை குறைப்பதற்காக பயன்படுத்தும் கிரையோமேட்டிக் தொழில்நுட்பம் இந்தியாவிலும் தனது ஆதிகத்தை நிலை நாட்டியுள்ளது.

குறிப்பாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் kolors நிறுவனம் இந்தியாவில் சுமார் பத்து மில்லியன் வாடிக்கையாளர்களின் உடல் எடை மற்றும் சரும பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளது.

குறிப்பாக சினிமா பிரபலங்களுக்கு கலர்ஸ் நிறுவனத்தின் கிரையோமேட்டிக்…

Read More

சதுரங்க வேட்டை பாணியில் போலி இரிடிய கலசம் விற்ற இருவர் கைது

by by Feb 23, 2021 0

சென்னை சாலிகிராமம் வேலாயுதம் காலனியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபகிறார் நியூட்டன்.

சினிமா போட்டோ கிராபரான இவர் தனது நண்பரான ஆடிட்டர் ரகுஜியுடன் சேர்ந்து ‘இரிடியம் கலசம்’ குறைந்த விலைக்கு கொடுப்பதாகவும் அதை வாங்கி விற்றால் பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்றும் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாரிடம் ஆசை வார்த்தை கூறி இருக்கிறார்.

இதை நம்பி சதீஷ்குமார் தனது நண்பர்களுடன்  சேர்ந்து இரிடியம் கலசம் வாங்க முடிவு செய்து ரூ.67 லட்சம் பணத்தை நியூட்டனிடம்…

Read More

ஆன்லைன் பாடங்கள் புரியாததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

by by Feb 11, 2021 0

ஆன்லைன் வகுப்பில் நடத்திய பாடங்கள் புரியவில்லை – கடிதம் எழுதிவைத்து மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

3 மாதத்திற்குள் 11 ஆம் வகுப்பு பாடங்களை முழுமையாக படிக்க முடியாது என அஞ்சி, சென்னை கொளத்தூரில், 16 வயது மாணவன், வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

இங்குள்ள டேனிஷ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த மாணவன் பிரவீன், கொரோனா ஊரடங்கு காலத்தில், ஆன்லைன் வகுப்பு பாடங்கள் புரியாமல் தவித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

பள்ளிகள் திறந்து இரண்டொரு நாட்கள் பள்ளிக்கு…

Read More

யானையை எரித்துக் கொன்றதாக இருவர் கைது – யானை எரியும் அதிர்ச்சி வீடியோ

by by Jan 22, 2021 0

நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொக்காபுரம் பகுதியில் 40 வயது ஆண் யானை முதுகில் காயத்துடன் சுற்றி வந்திருக்கிறது.

இந்த யானைக்கு வனத்துறையினர் இரண்டு மாதங்களுக்கு முன் மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளித்த்னர். ஓரளவு குணமடைந்த யானை மசினகுடி மக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடியது.

இதனால் பொது மக்களுக்கு, ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருந்ததால் யானையைப் பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்து துப்பாக்கி மூலம் யானைக்கு மயக்க மருந்து…

Read More

வாட்ஸ் ஆப்பில் இருந்து வெளியேறி சிக்னல் டெலிகிராமுக்கு மாறும் பயனாளிகள் – ஏன்?

by by Jan 9, 2021 0

உலகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் வாட்ஸ் அப் ப்ரைவசி பாலிசி மற்றும் Signal.

இதற்கு காரணம் உலக புகழ்பெற்ற டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க்கின் ஒற்றை ட்வீட். அவர் நேற்று ‘use signal’ என்ற ஒற்றை ட்வீட்டை பதிவிட்டார்.

அவர் பதிவிட்ட சில மணி நேரங்களில் இருந்து வாட்ஸ் அப்பை புறம் தள்ளிவிட்டு சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதேபோல், இன்னும் சில…

Read More

எதிர்கால தொற்றுகள் கொரோனாவை விட மோசமாக இருக்கும் – எச்சரிக்கும் டாக்டர்

by by Jan 4, 2021 0

வருங்காலத்தில் Disease X என்று அழைக்கப்படும் வைரசால் உலகம் பாதிக்கப்படலாம் என எபோலா வைரஸை கண்டுபிடித்த பேராசிரியர் ஜீன்-ஜாக் முயெம்பே தகவல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.

டாக்டர், பேராசிரியர் ஜீன்-ஜாக் முயெம்பே, 1976-இல் எபோலாவைக் கண்டுபிடிக்க உதவினார். இப்போது மனிதகுலம் அறியப்படாத புதிய வைரஸ்களை எதிர்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மழைக் காடுகளில் இருந்து ஆபத்தான வைரஸ்கள் உருவாகின்றன என்று கூறியுள்ளார்.

எதிர்கால தொற்றுநோய்கள் COVID-19 ஐ விட மோசமாக இருக்கக்கூடும். கொரோனா வைரஸை போல வேகமாக பரவும், தவிர…

Read More

ரஜினியின் அறிவிப்பு ஜோதிடர் ஷெல்வி தொழிலுக்கு ஆப்பு – வீடியோ

by by Dec 30, 2020 0

தற்போது தமிழக பா.ஜ.க.வில், அறிவுசார் பிரிவுத் தலைவராக உள்ள ஜோதிடர் ஷெல்வி, டிசம்பர் மாதத்திற்குள் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால் ஜோதிடம் பார்க்கும் தொழிலை விட்டு விடுவதாக அறிவித்திருந்த நிலையில், அவரது கணிப்பு பொய்யாகி உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

ஏற்கெனவே கொரோனாவால் மக்களை முடக்கி போட்டிருந்த 2020 ஆம் ஆண்டு எல்லோருக்கும் சிறப்பாக இருக்கும் என்று முன் கூட்டியே கணித்த யதார்த்த ஜோதிடர் ஷெல்வி இவர்தான்..!

இதே போலத்தான், நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதத்திற்குள் அரசியல் கட்சி…

Read More

பழிதீர்த்த பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் – மனமுடைந்த இசை ஞானி

by by Dec 28, 2020 0

ஏறத்தாழ 35 வருடங்களாக பிரசாத் ஸ்டூடியோவின்  பிரசாத் ரிக்கார்டிங் தியேட்டரைத்தான் இசையமைக்க பயன்படுத்தி வந்தார் இளையராஜா.

இந்நிலையில் கடந்த ஆண்டு அவருக்கும், பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட மோதலினால் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவை விட்டு வெளியேற நேர்ந்தது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த இளையராஜா, தான் 35 ஆண்டுகளாகப் பயன்படுத்திய அறையில் ஒரு மணி நேரம் தியானம் செய்யவும், அங்கேயிருக்கும் தன்னுடைய பொருட்களை வெளியில் எடுத்துச் செல்லவும் பிரசாத் நிர்வாகம் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்…

Read More

குப்பை கொட்ட கட்டணம் திட்டம் நிறுத்தி வைப்பு

by by Dec 24, 2020 0

சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டணம் வசூலிக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப் படுவதாக மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 படி பெருநகர சென்னை மாநகராட்சியால் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ம் ஆண்டு இயற்றப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் தமிழக அரசின் அனுமதி பெறப்பட்டு சென்னை மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் வீடுகள், வணிக…

Read More

கைலாசாவுக்கு 3 நாள் இலவச விசா உணவு தங்குமிடம் – நித்தி அழைக்கிறார்

by by Dec 17, 2020 0

கைலாசாவுக்கு மூன்று நாட்கள் இலவச விசா, உணவு, தங்குமிட வசதிகளோடு அனுமதிக்கப்படும் என்றும் அதற்கு இப்போதிருந்தே மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க தொடங்கலாம் என்றும் நித்தியானந்தா அறிவித்துள்ளார்.

“கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் இன்று முதல் கைலாசாவின் contact@kailaasa.org என்ற மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம்.

மூன்று நாள் விசா எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படும். அதேபோன்று மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பும்வரை உணவு தங்குமிட வசதிகளும், போக்குவரத்து வசதிகளும் கைலாசா நிர்வாகத்தின் சார்பாக செய்து தரப்படும்.

வருகை தரக்கூடிய நபர்கள் தங்களின்…

Read More