May 21, 2022
  • May 21, 2022
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

நெஞ்சுக்கு நீதி படம் வெற்றி பெற பிளக்ஸ் வைத்த காவலர் மீது வழக்குப் பதிவு

by by May 20, 2022 0

உதயநிதி நாயகனாக நடித்து அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கிறது நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை முதல்வர் ஸ்டாலின் பார்த்துப் பாராட்டி இருந்தார்.

அவரே வாழ்த்தி விட்ட பிறகு நாமும் வாழ்த்தினால் என்ன என்று நினைத்தாரோ என்னவோ, இந்தப் படத்துக்கு வாழ்த்து தெரிவித்து பெரம்பலூர் பாலக்கரையைச் சேர்ந்த காவலர் கதிரவன் என்பவர் ப்ளக்ஸ் வைத்து விட்டார்.

இது சோஷியல் மீடியாவில் பேசு பொருளான நிலையில் பெரம்பலூர் போலீஸார் அவர்மீது வழக்குபதிவு செய்திருக்கிறார்கள். மருத்துவ விடுப்பில் இருக்கும்…

Read More

கான்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்ட பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” பட First look Poster

by by May 19, 2022 0

கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் ,பா.இரஞ்சித் எழுதி இயக்கும் ”வேட்டுவம்”

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்டது.

இயக்குனர் பா.இரஞ்சித் படங்கள் இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் படங்கள் தயாரித்து வருகிறார். தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு
நிறுவனம் மூலமாக பரியேறும்பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் வெளிவந்தன.
இதனைதொடர்ந்து சேத்துமான், பொம்மை நாயகி, ஜெ.பேபி உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன.

இன்னிலையில் பா.இரஞ்சித் ”நீலம் ஸ்டுடியோ” எனும்…

Read More

ஆர் கண்ணன் தயாரித்து இயக்கும் ‘பெரியாண்டவர்’ – யோகிபாபு நடிக்கும் டைம் டிராவல் படம்

by by May 19, 2022 0

ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன், பூமராங், தள்ளிப் போகாதே போன்ற பல படங்களை டைரக்ட் செய்த ஆர்.கண்ணன் இயக்கும் 12வது படத்திற்கு “பெரியாண்டவர்” என்று பெயர் வைத்துள்ளார்.  

இவர் இப்பொழுது , ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘ தி கிரேட் இந்தியன் கிச்சன்’, மிர்ச்சி சிவா நடிக்கும் ‘காசேதான் கடவுளடா’ படங்களை டைரக்ட் செய்து முடித்து, வெளியிடும் வேலைகளை செய்துவருகிறார். 

இதில் சிவன் வேடம் அணிந்து கதை நாயகனாக நடிக்கிறார் யோகிபாபு. இது ஒரு டைம் டிராவ்லர்…

Read More

மதுரை இளைஞர்களுக்கு நெஞ்சுக்கு நீதி இலவச டிக்கெட்

by by May 18, 2022 0

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ரிலீஸாக இருக்கும் `நெஞ்சுக்கு நீதி’ படத்திற்கு இலவச டிக்கெட் வழங்க இருப்பதாக மதுரையைச் சேர்ந்த திமுக உறுப்பினர் ஒருவர் சமூக வலைதளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆர்ட்டிக்கள்15’ என்ற திரைப்படம் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. போனி கபூர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதில் உதயநிதி ஸ்டாலினுடன்,…

Read More

விக்ரம் இசை வெளியீட்டின் பாதியிலேயே உதயநிதி கிளம்பியது ஏன்? – கமல் விளக்கம்

by by May 16, 2022 0

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்து  கமல் கதாநாயகனாக நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வாங்கி இருக்க, உதயநிதி விழாவில் கலந்து கொண்டார்.

ரஜினி, சூர்யா உள்ளிட்டோர் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த சிம்பு…

Read More

கமலின் விக்ரம் பட அதிரடி ஆக்ஷன் டிரெயிலர்

by by May 15, 2022 0

Read More

லிங்குசாமி ராம் பொத்தினேனி இணையும் தி வாரியர் பட டீஸர்

by by May 15, 2022 0

Read More

கன்னித்தீவு தலைப்பிலேயே இயக்குனர் வெற்றியடைந்து விட்டார் – தியாகராஜன்

by by May 14, 2022 0

வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா நடிப்பில், சுந்தர் பாலு தயாரித்து இயக்கியிருக்கும் படம் “கன்னித்தீவு”. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர், இயக்குனர் தியாகராஜன், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் பேரரசு, நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருடன் நடிகர் ராஜ்குமார், நடிகை சுபிக்‌ஷா, இயக்குனர் சுந்தர் பாலு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இயக்குனர்,…

Read More

தமிழில் முதல் படம் வெளியாகும் நிலையில் கதாநாயகி தற்கொலை

by by May 14, 2022 0

தமிழில் “லாக் டவுன்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை சஹானா, நேற்று முன்தினம் கேரளாவில் தற்கொலை செய்து கொண்டார்

கடந்த வியாழன் அன்று தன்னுடைய 22வது வயது பூர்த்தியானதை ஒட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சஹானா அன்று இரவே கோழிக்கோட்டில் உள்ள அவரது வீட்டில் பிணமாக கிடந்தார்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் திருமணம் செய்துகொண்ட சஹானா அவரது கணவரால் கொடுமைப் படுத்தப் பட்டார் என்று பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரது கணவரான சஜத்…

Read More

டான் திரைப்பட விமர்சனம்

by by May 13, 2022 0

வம்பு வழக்குகள், அடிதடி கேஸ்களைத் திறம்பட கையாண்டு முடித்து கொடுப்பவன் மட்டும் ‘டான்’ அல்ல – தனக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து அதில் சாதித்து காட்டுபவனும் தான்தான் என்று ‘டானு’க்கு ஒரு புது இலக்கணம் வகுத்திருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி.

அதனிடையில் பெற்றோரும் ஆசிரியர்களும் நம்மீது கண்டிப்பு காட்டுவதும் கோபப்படுவதும் நமது நன்மைக்குத்தான் என்றும் பல காலமாக சொல்லப்பட்டு வரும் ஒரு செய்தியையும் சொல்லியிருக்கிறார்.

இதை அப்படியே சொன்னால் ஒரு நீதிக்கதை போலாகி வடும் என்பதால்…

Read More