நடிகையென்று வந்துவிட்டால் எப்படி நடிக்கச் சொல்கிறார்களோ, எப்படி உடை அணியச் சொல்கிறார்களோ அப்படி அணிந்துவிட்டுப் போக வேண்டியதுதான். அப்படி நடிக்க மாட்டேன், இப்படி உடை அணிய மாட்டேன் என்றால் ஓரம்கட்டி விடுவார்கள்.
“என்ன ஒன்று… கதைக்குத் தேவைப்பட்டது… அப்படி நடித்தேன்…” என்று பேட்டி கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும். அப்படித்தான் ஆனது அந்த பாக்ஸிங் வீராங்கனையின் நிலை.
இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமான ரித்திகா சிங், உண்மையிலேயே ஒரு மார்ஷல் ஆர்ட்ஸ் வீராங்கனை. அந்தப்படத்துக்கு நிஜ வீராங்கனையே தேவைப்பட, அவர் அப்படியே நடித்து பாராட்டுகளை அள்ளிக்கொண்டார்.
ஆனால், சினிமா விடுமா, அல்லது அவரால்தான் சினிமாவை விட்டுவிட முடியுமா..? அதன்பின் ஆண்டவன் கட்டளை என்ற நல்ல படத்தில் நல்ல ரோலிலேயே நடித்தார். அடுத்து வந்த ‘சிவலிங்கா’வில் லாரன்ஸுடன் சேர்ந்து ஒரு குத்து போட்டார் பாருங்கள்… அவர் போட்ட குத்தும், அணிந்ட ஆடைகளும் நிஜ குத்துச் சண்டையை விட ‘பஞ்ச்’சாக இருந்தது.
இப்போது தமிழில் ‘ஓ மை கடவுளே’ படத்தில் நடித்து வருபவர், இடையில் தெலுங்கு, இந்திப்பக்கமெல்லாம் போய் வந்தார். அங்கே தமிழ் போல் அடக்க ஒடுக்கமாக இருந்தால் விடுவார்களா..?
அதன் விளைவாக தன் அடையாளம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் முழு நடிகையாகவே மாறி கிளாமரில் புகுந்து விளையாடி வருகிறார். அங்கே அவர் கொடுத்த போஸ்களை கீழே கேலரியில் பாருங்கள்…