January 21, 2025
  • January 21, 2025

தலைநகரம் முதல் பாகத்தை விட 2வது பாகம் நன்றாக உள்ளது என்கிறார்கள் – VZ துரை

by on June 26, 2023 0

Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் […]

Read More

இனி லக்‌ஷிதாவின் தாத்தா கல்யாணம் என்பார்கள் – சிவகுமார் புகழுரை

by on June 26, 2023 0

முதல் முறையாக திருக்குறளுக்கு பரதநாட்டியம்..!  கல்யாணம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், இனி லக்‌ஷிதா மூலமாகத்தான் அவருக்கு அறிமுகம் கிடைக்கும்..! லக்‌ஷிதாவின் பரதநாட்டிய திறன் கல்யாணத்திற்கு மட்டும் அல்ல தமிழர்களுக்கே பெருமை சேர்க்கும்..! தமிழ் திரையுலகிலும், பத்திரிகை உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் திரு.கல்யாணம். ஆனந்த் திரையரங்கம் தொடங்கி நாக் ஸ்டுடியோஸ் வரை, அவர் இருக்கும் இடங்கள் மாற்றம் அடைந்தாலும், அவர் பிறரிடம் காட்டும் அன்பும், அக்கறையும் என்றுமே மாறாதது. அதனால்தான் மறைந்த […]

Read More

பாயும் ஒளி நீ எனக்கு திரைப்பட விமர்சனம்

by on June 25, 2023 0

பாரதியின் வரிகள் பவர்ஃபுல்லானவை என்றாலும்… இந்த படத்துக்கு இந்த தலைப்பு பக்காவாக பொருந்துகிறது என்றாலும்… இத்தனை நீளமான தலைப்பை எழுத முடியாமல் போஸ்டரிலேயே சுருக்கி சுருக்கி எழுதி இருப்பதிலேயே தம் கட்டி இருக்கிறார்கள். இதிலிருந்து புரிந்து கொள்ளலாம் – இப்படி நீளமான தலைப்புகளை வைப்பதில் இருக்கும் சிரமத்தை. இதையும் படித்து புரிந்து கொண்டு தியேட்டருக்குள் வருபவர்களையாவது படம் திருப்திப் படுத்துகிறதா என்று பார்க்கலாம். முழுக்க பார்வைத் திறன் இல்லாத நாயகர்களை சார்லி சாப்ளின் காலத்தில் இருந்தே பார்த்து […]

Read More

அழகிய கண்ணே திரைப்பட விமர்சனம்

by on June 25, 2023 0

இதுவரை வந்த சாதியக் காதல் சொல்லும் படங்களில் ஒரு பக்கத்தில் தாழ்த்தப்பட்டவர்களும், இன்னொரு பக்கத்தில் வேறுபட்ட சாதியினரும் இருந்திருக்கிறார்கள். அந்த இன்னொரு பக்க சாதியினர் பிராமணர்களாக அதிகம் இருந்ததில்லை. அப்படி இருந்த படங்களிலும் பிராமணர்கள் அமைதியான போக்கை மேற்கொள்பவர்களாகவும், எதிர்தரப்பு சாதியினர் மட்டுமே வன்முறை மிகுந்தவர்களாகவும் சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் படத்தில்தான் முதல்முறையாக தங்கள் சாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு போன இன்னொரு சாதியைச் சேர்ந்த ஆணை பிராமண சமூகத்தினர் வன்முறைப் பாதையில் கொலை செய்யும் […]

Read More

தலைநகரம் 2 திரைப்பட விமர்சனம்

by on June 25, 2023 0

  பிரபாகர், விஷால் ராஜன், ஜெய்ஸ் ஜோஸ் தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஸ்டன்ட் மாஸ்டர் டான் அசோக் இயக்குநரின் வெரைட்டியாகக் கொலை செய்யும் முயற்சிகளுக்கு உதவியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக இறுதி காட்சியில் கதாநாயகன் செய்யும் கொலை ‘இதுக்கு அந்த வில்லன்களே பரவாயில்லையே’ என யோசிக்க வைக்கிறது. பில்டப் காட்சிகளில் ஜிப்ரானின் பின்னணி இசை ஓகே ரகம். இ.கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவில் சராசரியான பணியைச் செய்துள்ளார்.

Read More

நாயாடி திரைப்பட விமர்சனம்

by on June 25, 2023 0

இதுவும் ஒரு திரில்லர் ஹாரர் வகையறா படம்தான். இப்போதைய ட்ரெண்டின் படியே இந்த படத்துக்கும் ஒரு முன்னோட்டக் கதை சொல்லப்படுகிறது. அரசர் காலத்தில் சமூகத்தில் நான்கு பிரிவுகள் இருந்ததாகவும், அந்தக் கடைசிப் பிரிவில் இருப்பவர்கள் பிற மூன்று சமூகத்தினருக்கு எடுபிடிகள் ஆகவும் ஏவலாட்களாகவும் அடிமைகளாகவும் நடத்தப்பட்டதாகவும் அவர்களே நாயாடி என்ற பிரிவைப் சேர்ந்தவர்களாகவும் சொல்லப்படுகிறது. சமூகத்தில் தங்களுக்கு என்று எந்த பாதுகாப்பும் இல்லாத சூழலில் அவர்கள் தங்களுக்கென்று ஒரு தெய்வத்தைப் படைத்து அந்தத் தெய்வத்துக்கு பலிகள் கொடுத்து […]

Read More

வாடகை வீட்டுக்கு குட்பை – 18 லட்சத்தில் உங்க வீடு ரெடி

by on June 24, 2023 0

18 லட்சத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு! – சொந்த வீடு வாங்கும் கனவை நினைவாக்கும் ’ஒன் ஸ்கொயர்’ பெரும்பாலான மக்களின் மிகப்பெரிய கனவு என்றால் சொந்த வீடு வாங்குவது தான். ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் சொந்த வீடு என்ற கனவு ஒரு சிலருக்கு மட்டுமே நிஜமாகிறதே தவிர மற்றவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. அதிலும், சென்னையில் சொந்த வீடு என்பதை சிலர் நினைத்து பார்ப்பது கூட இல்லை. ஆனால், இந்த நிலை இனி இல்லை என்பது தான் […]

Read More

ASSOCHAM Southern region organised CSR and Sustainability Awards

by on June 24, 2023 0

• IIT Madras and Ashok Leyland received award for excellence in supporting education and skill • Honeywell Hometown solutions India Foundation and Kauvery Hospital got the award for Excellence in Providing Support to Healthcare Chennai, 24th June 2023: ASSOCHAM Southern Region organised the 3rd Edition of Corporate Social Responsibility (CSR) & Sustainability Conference & Award […]

Read More

ரெஜினா திரைப்பட விமர்சனம்

by on June 23, 2023 0

நல்ல கதை ஹீரோவாக இருக்கும்போது அந்தப் படத்துக்கு ஒரு முன்னணி ஹீரோ தேவையில்லை என்பதைப் புரிந்து கொண்டவர்கள் ஹீரோக்களைத் தேடி ஓட மாட்டார்கள் என்பது ஒரு சினிமா சித்தாந்தம். அப்படி நாயகியை முன்வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் மேற்கூறிய கூற்றை மெய்ப்பிக்கிறதா என்று பார்க்கலாம். சமுதாயத்திற்கென்றே உழைப்பவர்கள் கண்டிப்பாக சொந்த வாழ்க்கைக்கு ஒரு நன்மையும் செய்ய மாட்டார்கள். அப்படி சமுதாயப் போராளியான ஒருவர், தன் 10 வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வர அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டு […]

Read More

தண்டட்டி திரைப்பட விமர்சனம்

by on June 23, 2023 0

“அழுத்தித் தேயுடா விளக்கெண்ண… அவனுக்கு வலிச்சா உனக்கென்ன..?” என்கிற கதையாக சுயநலம் பிடித்த கிடாரிப்பட்டி என்ற கிராமத்தில் நடக்கிறது இந்தப் படத்தின் கதை. போலீஸ் என்றாலே இந்தக் கிராமத்துக்கும் கிடாரிப்பட்டி என்றாலே போலீசுக்கும் ஒவ்வாமை என்பதை ஓப்பனிங்கிலேயே சொல்லிவிடுகிறார்கள். அந்த கிராமத்தில் வாழ்ந்த பாம்பட மூதாட்டி ஒருவர் பாவம் பட்டுத் தொலைந்து போக, அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பு விரைவில் ஓய்வு பெறவிருக்கும் காவலர் சுப்பிரமணியிடம் வந்து சேருகிறது. அவரும் லேசுப்பட்ட ஆள் இல்லை. வேலியில் போகிற […]

Read More
CLOSE
CLOSE