January 19, 2025
  • January 19, 2025

திருமணம் செய்து திரும்பி வந்த சேரன்..!

by on December 13, 2018 0

தமிழ்ப்படவுலகின் பெருமைமிக்க இயக்குநர்களில் ஒருவரான சேரன் திரைப்படங்களை லாபகரமாக வெளியிடும் சி2எச் என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதில் மும்முரமாக இறங்கியிருந்தார். அந்த திட்டத்தால் அவர் இயக்குநராகச் செயல்படமுடியாமல் இருந்தது. அதன் காரணமாகவே அவர் கடைசியாக இயக்கிய ‘ஜேகே’ படம் மிகத் தாமதமாக வெளிவந்ததிலும் அவர் மீண்டும் படம் இயக்குவது தாமதப்பட்டது. அந்தச் சிக்கல்கள் எல்லாவற்றிலும் இருந்து மீண்டு ‘திருமணம் (சில திருத்தங்களுடன்)’ என்ற படத்தை செய்து முடித்து மீண்டும் திரையுலகில் இயக்குநராகப் பிரவேசிக்கிறார். படத்தில் அவரே நடிக்க அவருடன் […]

Read More

சீதக்காதியாக முதலில் விஜய் சேதுபதியை நினைத்துப் பார்க்கவில்லை – பாலாஜி தரணீதரன்

by on December 13, 2018 0

விஜய் சேதுபதியின் 25வது படமாக வருகிறது ‘பேஸ்ஸன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் ‘சீதக்காதி’. 75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.    ‘ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் மிக பிரமாண்டமாக வெளியிடும் இந்தப் படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சீதக்காதி படத்தில் நடித்த ஊட்டி மணி, கலைப்பித்தன், ஸ்ரீரங்கம் ரங்கமணி, ஐஓபி ராமச்சந்திரன், சந்திரா, மணிமேகலை, ஜெயந்தி, எல் […]

Read More

காமெடி சதீஷுக்கு கல்யாணம் பண்ணிவைத்த பி.ஜி.முத்தையா

by on December 12, 2018 0

சினிமாவில் காதல் திருமணங்களை பெரும்பாலும் உடன் இருக்கும் கலைஞர்களேதான் நடத்தி வைப்பார்கள். அவை திடீரென்று நடைபெறும் திருமணங்களாக இருப்பதுண்டு. இன்று காமெடி சதீஷ் அப்படி திடீர் திருமணம் செய்துகொண்டதாக வலைதளங்களில் செய்திகளும் புகைப்படங்களும் பரவின. மாலையும், கழுத்துமாக இருக்கும் சதீஷ் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலிகட்ட, அருகில் பி.ஜி.முத்தையாவும், வைபவும் கல்யாணத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்த பலரும் சதீஷுக்கு வாழ்த்து சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். பிறகுதான் இது பி.ஜி.முத்தையா செய்து வைத்த செட்டப் கல்யாணம் என்பது தெரியவந்தது. […]

Read More

பாகுபலியைப் போல் கேஜிஎஃப் பெரிய வெற்றியடையும் – விஷால்

by on December 11, 2018 0

இந்தியாவெங்கும் கிறிஸ்துமஸ் வெளியீடாக ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது கன்னட முன்னணி நட்சத்திரமான யாஷ் நடித்திருக்கும் ‘கேஜிஎஃப்’. இதனை தமிழில் வெளியிடும் விஷால் இன்று யாஷை அறிமுகப்படுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்வில் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியும் கலந்து கொண்டார். அதில் பேசிய விஷால், “இந்தப்படம் ‘பேன் இன்டியன் மூவி’யாக ஐந்து மொழிகளில் ஒரே நாளில் வெளியாகவிருக்கிறது. அதனாலேயே ஒரே டைட்டிலாக கேஜிஎஃப் என்றே வைக்கப்பட்டிருக்கிறது. இது பாகுபலியைப் போல் பெரிய வெற்றியடையும் என்பதில் சந்தேகமில்லை. தமிழில் […]

Read More

குழந்தைகளையும் வெங்கட்பிரபுவின் பார்ட்டிக்கு அழைத்துப்போக சென்சார் அனுமதி

by on December 11, 2018 0

வழக்கமாக குழந்தைகளை யாரும் ‘பார்ட்டி’க்கு அழைக்க மாட்டார்கள். ஆனால் வெங்கட் பிரபு அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார். ஆம், வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்துக்கு சென்சார் உறுப்பினர்களால் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்த்து மகிழும் ஒரு அழகான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் ‘பார்ட்டி’. இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா கூறும்போது, “வெங்கட் பிரபு பெரியவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்று நினைத்து மிகைப்படுத்தி எந்த படத்தையும் எடுத்ததில்லை. அவரது முந்தைய […]

Read More

யோகிபாபு வளர்ச்சியும், மேக்னா நாயுடு வீழ்ச்சியும்

by on December 11, 2018 0

ஹீரோக்கள் எல்லோருமே ஒரு படத்தில் காக்கிச்சட்டை போட்டு போலீஸ் ஆகிவிடுவதைப் போல் காமெடியன்களுக்கான எவர்கிரீன் கேரக்டர் ‘எமன்’. இது யோகிபாபுவின் சீசன் என்பதால் அவரும் ‘தர்மபிரபு’ படத்தில் எமனாகிறார். சொல்லப்போனால் எமன்களாகிறார். அப்பா எமன், மகன் எமன் என்று இரு எமன்களாக அவர் நடிக்கும் இப்படம் எமலோகத்தைப் பற்றிய நகைச்சுவை கலந்த படமாம். தற்போது, இப்படத்திற்காக ஏவிஎம் ஸ்டூடியோவில் ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு தளம் போடப்பட்டுள்ளது. சுமார் 1 ½ லட்சம் வருடங்கள் பழமையான […]

Read More

இனி அதிக விலைக்கு டிக்கெட் விற்றால் தியேட்டரில் போய் உதைப்பேன் – மன்சூர் அலிகான்

by on December 10, 2018 0

மலையாள சினிமாவில் புகழ்பெற்ற தயாரிப்பாளரான ஹாசிம் மரிக்கர், தன் மரிக்கர் ஆர்ட்ஸ் சார்பாக இயக்குநராகவும் தமிழில் தடம் பதிக்கும் படம் ‘உன் காதல் இருந்தால்’. ஸ்ரீகாந்த் நீண்ட இடைவெளிக்குப்பின் நாயகனாகும் இப்படத்தில் அவருடன் சந்திரிகா ரவி, லெனா, காயத்ரி மற்றும் மம்முட்டியின் சகோதரர் மகன் மபுள் சல்மான் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மன்சூர் அஹமது இசைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது.  கிட்டத்தட்ட படத்தில் பணியாற்றிய அனைவரும் வந்திருந்த நிகழ்வில் சிரப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மன்சூர் அலிகான் […]

Read More
CLOSE
CLOSE