January 24, 2025
  • January 24, 2025

பிக் பாஸ் 2 ஐஸ்வர்யா தத்தாவின் ஆபத்தான விளையாட்டு

by on August 17, 2019 0

‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (PUBG) சுருக்கமாக ‘பப்ஜி’ என்பது காமெடி திரில்லரான படம். இந்தப்படத்தை ‘தாதா 87’ படத்தை இயக்கிய ‘விஜய் ஸ்ரீஜி’ இயக்குகிறார். இதில் தமிழ் ‘பிக் பாஸ் சீசன் 2’ புகழ் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாகிறார். நயன்தாரா போல் கதையின் நாயகியாம். மிஸ் தத்தாவைத் தவிர மேலும் இந்தப் படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இதில் ‘பப்ஜி’ என்ற கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் க்ரைம் ப்ரான்ச் ஆபிஸராக நடிக்கிறாராம். ஜூலி, தாதாகதிர் முக்கிய […]

Read More

மாதவனை மதச் சீற்றம் அடைய வைத்த ரசிகர்…

by on August 16, 2019 0

நடிகர் மாதவன் நேற்று சுதந்திர தினத்தின் போது ரசிகர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அப்போது சுதந்திர தினவிழா, ரக்சா பந்தன் மற்றும் ஆவணி அவிட்ட வாழ்த்துக்களை கூறி அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருவர் மத ரீதியிலாக கேள்வியை எழுப்பியுள்ளார்.   அவருடைய பூஜை அறையில் சிலுவை வைக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்டு அந்தக் கேள்வி இடம் பெற்றது.  புகைப்படத்தை உன்னிப்பாக பார்த்து கண்டுபிடித்து, “பின்னணியில் சிலுவை இருப்பது ஏன்? அது என்ன கோவிலா? நீங்கள் என்னுடைய மதிப்பை இழந்து […]

Read More

இந்தி அந்தாதுன் தமிழில் பிரஷாந்த் நடிக்க தயாராகிறது

by on August 16, 2019 0

இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்று சாதனை படைத்தது இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’. சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் பங்குபெற்று, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன். இப்போது அந்தாதுன் கதையைத் தமிழில் தன் மகன் பிர்ஷாந்தைக் கதாநாயகனாக்கித் தயாரிக்கவிருக்கிறார் நடிகரும், […]

Read More

விஐபி ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை

by on August 16, 2019 0

ஹேர் ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக, அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது விஐபி ஹேர் கலர் ஷாம்பூ. இந்த புதிய தயாரிப்பை கண்டுபடித்தது சாட்சாத் ஒரு சினிமா நடிகர் என்றால் நம்ப முடிகிறதா..? ஆம்.. எல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் ஆர்கே தான் இதனைக் கண்டுபிடித்துள்ளார். வெற்றிகரமான தொழிலதிபர் என்கிற இன்னொரு முகமும் இவருக்கு இருக்கிறது. இவரது புதிய கண்டுபிடிப்பான […]

Read More

ஜப்பானில் படமான சுமோ வெளியீடு பற்றிய அறிவிப்பு

by on August 15, 2019 0

எஸ்பி ஹோசிமின் இயக்கியிருக்கும் இந்தோ-ஜப்பானிய படமான ‘சுமோ’, சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படமாகும். ஜப்பானில் பாடல் காட்சிகளையும், படபிடிப்பையும் நடத்துவது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும் 35 நாட்கள் படப்பிடிப்பு அங்கே வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் ஹோசிமின். அதற்கு உந்து சக்தியாக பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக படத்தைத் தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். ‘வணக்கம் சென்னை’ படத்தைத் தொடர்ந்து, மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள ‘சுமோ’வில் ஒரு […]

Read More

இந்திய ராணுவத்தை வலிமையாக்க முப்படைகளுக்கும் ஒரே தலைவர் – மோடி

by on August 15, 2019 0

இந்தியாவின் 73-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இன்று (15-08-2019), தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். அதன்பின்னர், பிரதமர் 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றினார். இந்த விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய சுதந்திர […]

Read More

நானறிந்த நா முத்துக்குமார் – சிறப்புக் கட்டுரை

by on August 14, 2019 0

என்னை அன்புடன் “அண்ணே…” என்றழைத்த நா.முத்துக்குமாரை நாமிழந்த மூன்றாவது நினைவு தினமின்று. (ஆகஸ்டு 14) காலம் கார்கால மேகம் போல வேகத்துடன் கடந்துகொண்டேதான் இருக்கிறது. முதல் முதலில் நான் முத்துக்குமாரை சந்தித்தது (நாம் தமிழர்) சீமானின் வீட்டில். நான் அப்போது தினமணி நாளிதழில் எழுதிக் கொண்டிருந்தேன். என்னை சீமான் “ஐயா…” என்று அழைக்க நானும் அவ்வாறே அவரை அழைப்பேன். அவர்கள் இருவரும் இப்போதிருக்கும் உயரங்களில் அப்போது இல்லை. ஒரு இயக்குநராக மட்டும் சீமான் அறியப்பட்டிருந்த காலம். அவர் […]

Read More

தன்னை நீக்கிய மாநாடு தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி

by on August 14, 2019 0

நடித்து நல்ல பெயர் எடுக்கிறாரோ இல்லையோ, வம்பு வளர்த்தே பெயரெடுப்பதில் சிம்புவுக்கு நிகர் சிம்புதான் – இல்லையென்றால் சிம்புவுக்கு நிகர் ‘எஸ்டிஆர்’தான் எனலாம். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் அவருக்கு ஒரு படம் பண்ணித் தருவதாக வாகுறுதி தந்து அந்தப்படத்துக்கு இயக்குநராக வெங்கட்பிரபுவை ஒப்பந்தம் செய்ய வைத்து, படத்துக்கு ‘மாநாடு’ என்று பெயர் வைத்தார்கள். கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்தும் சிம்பு சரியாக ஒத்துழைக்காத காரணத்தினால் அவரைத் தன் படத்திலிருந்து நீக்குவதாக நொந்து போய் […]

Read More
CLOSE
CLOSE