November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பெண்களை மையப்படுத்தும் கதைகள் நிறைய வர வேண்டும் – பூமிகா
September 12, 2018

பெண்களை மையப்படுத்தும் கதைகள் நிறைய வர வேண்டும் – பூமிகா

By 0 1071 Views

செப்டம்பர் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் ‘யு-டர்ன்’ சிறந்த நடிக, நடிகையரைக் கொண்டிருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதில் ஒருவர் பூமிகா. ஒரு இடைவெளிக்குப் பின் தமிழ்த்திரைக்கு வரும் அவர் இந்த படத்தை பற்றிக் கூறும்போது, ‘யு டர்னில்’ என் கதாபாத்திரம் நான் கடந்த காலங்களில் செய்ததை போல் அல்லாமல் வித்தியாசமாக அமைந்துள்ளது. அதில் என் நடிப்பை ரசிகர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று நம் யூகத்துக்கு சவால் விடுகிறார் பூமிகா.

மேலும் நாயகி சமந்தா பற்றிக் குறிப்பிடும்போது, “சமந்தா ஒரு பிரமாதமான நடிகை, படப்பிடிப்பில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். இந்தப் படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்..!” என்று பாராட்டுகிறார் பூமிகா.

தற்போது பெண்களை மையப்படுத்தி உருவாகும் படங்களின் போக்கை பற்றி அவர் கூறும்போது, “நானும் பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளேன், இந்த வகையிலான திரைப்படங்கள் கணிசமாக அதிகரித்து வருவது ஆரோக்கியமான விஷயம்தான். திரைக்கதை எழுத்தாளர்கள் இது போன்ற திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்களை தொடர்ந்து எழுத வேண்டும்..!” என்றார்.

1999 ஆம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமான பூமிகா திரைக்கு வந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகின்றன. இதில் வெற்றி, தோல்வி எல்லாமே அடக்கம் என்றிருக்க, “என் பெற்றோர் வெற்றி, தோல்வியை எவ்வாறு சமமாக அணுகுவது என்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் வெற்றி, தோல்வி எதுவும் என்னை பாதிப்பதில்லை..!” என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார் பூமிகா சாவ்லா.

“ஏன் தமிழில் அடிக்கடி இடைவேளை விட்டு விடுகிறீர்கள்..?” என்றால்,

“தமிழில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், கதை மற்றும் படக்குழுவும் சரியாக அமைய வேண்டும். அப்போது தான் அது சரியாக ரசிகர்களிடம் சென்று சேரும்..!” என்று சிரிக்கிறார் பூமி.

யு டர்ன் நல்ல திருப்பத்தை அவருக்குத் தரட்டும்..!