தன் முந்தைய இரண்டு படங்களின் மூலம் பரபரப்பைக் கிளம்பிய மோகன் ஜி இயக்கியிருக்கும் படம் இது என்பதாலும், செல்வராகவன் கதை நாயகனாக நடித்திருக்கும் காரணத்தாலும் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளானது.
ஆனால், இன உணர்வைத் தூக்கிப் பிடிக்கும் வழக்கமான அவரது பாதையில் இருந்து விலகி பொதுவான சமுதாயக் கண்ணோட்டத்தில் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் அவர்.
ஆரம்பக் காட்சியே முழு வீச்சில் தொடங்குகிறது. ஒரு இளம் பெண்ணை நடுத்தர வயதுள்ள மனிதர் காட்டுக்குள் கொண்டு வந்து பாலியல் உறவுக்கு ஆட்படுத்தும் வேளையில் அங்கே தோன்றும் செல்வராகவன் அந்த பெண்ணை அனுப்பி விட்டு அந்த காமகதை அடித்து துவைத்து இரண்டு கால்களையும் பிய்த்து கொன்று விடுகிறார்.
அடுத்த காட்சியில் பழுத்த சிவ பக்தராக பாடி ஆடிக்கொண்டு வருகையில் இவர் இன்னும் சில கொலைகள் செய்யக் கூடும் என்று புரிந்து விடுகிறது.
அதன்படியே அடுத்து ஒரு காவலாளியை நெஞ்சில் அடித்துக் கொன்றும் இன்னொரு பெண்கள் ஹாஸ்டல் பெண் வார்டனை தலைகீழாக கட்டி கழுத்தை அறுத்தும் கொன்று விடுகிறார். இந்த கொலைகள் எல்லாம் ஏன் அடுத்து அவர் குறி வைப்பது யாரை என்பதெல்லாம் படத்தின் இரண்டாம் பாதி கதை சொல்லுகிறது.
பீம ராஜா என்று தன்னை கூறிக் கொள்ளும் செல்வராக உனக்கு ஏற்ற வேடம் இது. பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறை அழுத்தங்களை குறைப்பதற்காகவே அவர் செய்யும் கொலைகள் சம்ஹாரம் என்ற அளவில் நியாயப்படுத்தப்படுகிறது.
அவ்வளவு கொடூரமான கொலைகளை செய்து விட்டு சிவனிடம் வந்து அவங்க என்ன அடிச்சாலும் தாங்குற சக்தியை கொடு ஆனால் அவர்களை தாக்குற சக்தியையும் கொடு என்று கேட்கும் போது அவரது அப்பாவித்தனம் வெளிப்படுகிறது.
இரண்டாவது பாதி படம் பார்த்தவுடன் அந்த அப்பாவி தனத்துக்குள் இருக்கும் அப்பாத்தனமும் புரிகிறது.
இந்தக் கதை எப்படி போக இதே கதையில் இன்னொரு இழையாக ராணுவத்தில் மேஜராக இருந்து ஓய்வு பெற்ற நட்பு புரிய முடியாத காவல்துறை வழக்குகளுக்கு தன் மதன் உட்பட்டால் உதவி செய்து கொண்டிருக்கிறார்.
அவரது அண்ணன் மகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி இருக்க அதை துப்பறிய போகும் வேலையில் அவருக்கு திடுக்கிடும் சில உண்மைகள் தெரிய வர காவல்துறையின் உதவி கொண்டு அதை முடிக்க முடியாது என்று புரிகிறது. அதற்கு சரியான ஆள் செல்வதாக வந்தான் என்று தெரிந்து கொண்டு அவரை தேடி வருகிறார்.
இருவரும் கைகோர்த்து என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ்.
ராதாரவி, கே.ராஜன், மன்சூர் அலிகான், தேவதர்சினி, பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா, கூல்ஜெயந்த் உள்ளிட்டு வரும் தங்கள் பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சாம்.சி.எஸ் இசையில் சிவ சிவாயம் பாடல் மனதெல்லாம் ஒலிக்கிறது. பின்னணி இசையில் மட்டும் இன்னும் சத்தத்தை குறைத்து இருக்கலாம். ஃபருக் ஜே பாட்ஷாவின் ஒளிப்பதிவு படத்தின் தரத்துக்கு தக்கவாறு இருக்கிறது.
பகாசூரன் – வதம்..!