April 18, 2025
  • April 18, 2025
Breaking News
September 11, 2019

ஆம்பள ஐட்டம் – ஜிவி பிரகாஷை விளாசும் கீச்சர்கள்

By 0 906 Views

ஏற்கனவே ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் நடித்து அதுவரை இசையமைப்பாளராகவும், நடிகராகவும் சேர்த்துவைத்த அத்தனை நல்ல பெயரையும் கெடுத்துக் கொண்டவர் ஜி.வி.பிரகாஷ்.

இப்போது மீண்டும் ஒருமுறை தன் பெயரை தானே கெடுத்துக் கொள்ள முனைந்திருக்கிறார். அவர் அடுத்து நடிக்கவிருக்கும் அரைடஜன் படங்களில் ஒன்று ‘பேச்சலர்’. அதன் முதல் பார்வையை இன்று தமிழ்பற்றுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அந்த முதல் பார்வை ஜி.வி.பிரகாஷை மட்டுமல்லாது ஹர்பஜன் பெயரையும் சேர்த்து கெடுத்து விட்டது. டென்ஷனான மகா ஜனங்கள் தங்கள் கமெண்ட்களால் ஜி.வி.பிரகாஷையும், ஹர்பஜனையும் வறுத்தெடுத்து வருகிறார்கள். 

அதில் ஒருசிலர் ஜி.வி.பிரகாஷை ‘ஆம்பள ஐட்டம்’ என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள். மற்றும் ‘இப்பதான் ரெண்டு படம் ஒழுங்கா நடிச்சான்… திரும்பவும் தன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சுட்டான்…” என்றெல்லாம் கழுவி ஊற்றி வருகிறார்கள். 

ஆனால், எல்லாமே பப்ளிசிட்டி என்றுதான் படம் சம்பந்தட்டவர்கள் நினைப்பார்கள் என்று தோன்றுகிறது. ஏனெனில் இப்படி ஒரு கண்றாவிப் படத்தை ‘ஃபர்ஸ்ட் லுக்’காக வெளியிட வன்மம் கொண்ட மனங்களால் மட்டுமே முடியும். 

அவர்கள் நினைத்தது நடந்து விட்டது. இனி அதற்கான விளக்கத்தை அவர்கள் சொல்லக் கேட்கலாம்..!