March 24, 2023
  • March 24, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • உடற்பயிற்சி செய்யும் போது விபத்து – அருண் விஜய் வெளியிட்ட வீடியோ
May 16, 2020

உடற்பயிற்சி செய்யும் போது விபத்து – அருண் விஜய் வெளியிட்ட வீடியோ

By 0 438 Views

வெள்ளிவிழா கொண்டாடும் அருண் விஜய் இப்போது மாஃபியா படத்தை அடுத்து ‘அக்னி சிறகுகள்’, ‘சினம்’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து நடித்துவருகிறார்.

இந்நிலையில் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது வீடியோ ஒன்றை பகிர்வார்…

அந்த வகையில் லேட்டஸ்டாக ஷேர் செய்திருக்கும் வீடியோவில் அவர் அந்தரத்தில் கம்பி ஒன்றில் தலைகீழாக தொங்கி உடற்பயிற்சி செய்த போது தவறி கீழே விழுந்து விடுகிறார்.

பழைய வீடியோவான அதனை பகிர்ந்து, ”எப்பொழுதும் இதனை முயற்சிக்காதீர்கள். உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் மிஷினை பரிசோதித்துக் கொள்ளுங்கள். நான் கீழே விழுந்த சமயத்தில் இருந்து சரியாக ஒரு வாரத்திற்கு காலில் வீக்கம் இருந்தது.

நல்லவேளை என் தலையில் அடிபடவில்லை. கடவுளுக்கு நன்றி. பயிற்சியாளர்கள் அல்லது கண்காணிப்பாளர்கள் இல்லாமல் உடற்பயிற்சி செய்யாதீர்கள்” என்று அட்வைஸ் எல்லாம் கொடுத்திருக்கிறார்…

புண்பட்டதால் பண்பட்டவர்..!