January 24, 2026
  • January 24, 2026
Breaking News
September 13, 2021

தியேட்டருக்கு வரும் அருண் விஜய்யின் பார்டர்

By 0 632 Views

நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘அருண்விஜய்யின் பார்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ‘அருண்விஜய்யின் பார்டர்’ படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள்.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் தேசபக்தி கொண்ட ஆக்சன் என்டர்டெய்ன்மென்ட் திரைப்படம் ‘அருண்விஜய்யின் பார்டர்’.

ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்திருக்கின்றன. 

அருண்விஜய் பார்டர்’ படத்தில் சவாலான புலனாய்வு துறை அதிகாரியாக நடித்துள்ளார். இதன் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக அவர் கடுமையாக உழைத்து, ஒத்திகையும், பயிற்சியும் செய்து சண்டைக்காட்சிகளில் நடித்து அசத்தியிருக்கிறார்.

அதிலும் கொரோனா தொற்று பரவல் இருந்த காலகட்டத்தில், படத்தின் பணிகளை நிறைவு செய்வதற்காக படக்குழுவினருக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறார். குறிப்பாக டெல்லி, ஆக்ரா மற்றும் அஜ்மீர் ஆகிய நகரங்களின் வீதிகளில் நடைபெற்ற படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு முழுமையான ஒத்துழைப்பை அளித்திருக்கிறார்.

இந்தப்படத்தில் அறிமுக நடிகை ஸ்டெபி பட்டேல், நாயகன் அருண் விஜய்யின் காதலியாக – ஜோடியாக நடித்திருக்கிறார். அவருடைய திறமையான நடிப்பு, இப்படத்தின் வெற்றிக்கு உதவும் வகையிலேயே அமைந்திருக்கிறது.

நடிகை ரெஜினா கசாண்ட்ரா, இப்படத்தில் நாயகன் அருண் விஜயுடன் பணியாற்றும் புலனாய்வு துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவரும் சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார்.

பிரபல நடிகர் பக்ஸ் என்ற பகவதி பெருமாள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.