August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கிராமப்புற செட் என்றால் திருவிழா மார்க்கெட் மட்டும் அல்ல – சீமராஜா முத்துராஜ்
September 10, 2018

கிராமப்புற செட் என்றால் திருவிழா மார்க்கெட் மட்டும் அல்ல – சீமராஜா முத்துராஜ்

By 0 1098 Views
Muthuraj

Muthuraj

சீமராஜா படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் தொடர்பான காட்சிகள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது. இதில் கலை இயக்குனர் முத்துராஜின் பங்கும் முதன்மையானது. அதற்காக குழுவில் உள்ள மற்றவர்களுக்கு தன் நன்றியை தெரிவிக்கிறார்.

“சீமராஜாவில் என் வேலை நன்கு கவனிக்கப்படுகிறது என்றால், அதற்கு காரணம் பாலசுப்ரமணியம் சாரின் ஒளிப்பதிவுதான். அவர் என் கலை வேலையின் ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களையும் ரசித்தார். அவர் படப்பிடிப்புக்கு முன்பே வாட்ஸாப்பில் என் பரிந்துரையையும் கேட்பார். இசையமைப்பாளர் டி இமான் திருவிழா சூழலை தன் இசையால் உருவாக்கியிருக்கிறார்.

அதேபோல் பொதுவாக, ஒரு கிராமத்து படம் பண்ணும் போது அதன் தயாரிப்பாளருக்கு எங்கள் ஆர்ட் டிபார்ட்மெண்ட் மீது சில கட்டுப்பாடுகள் இருக்கும். பெரும்பாலும் எங்கள் வேலை கோயில் திருவிழா அல்லது மார்க்கெட் உருவாக்குவதோடு நின்று விடும்.

ஆனால் ஆர்.டி.ராஜா என் கற்பனை திறனை வெளிப்படுத்த எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். சில நேரங்களில், நான் செலவை மனதில் வைத்து சமரசம் செய்து கொண்டாலும், படம் நன்றாக வருவதற்கு என்னை ஊக்குவிப்பார்.

மேலும், பொன்ராம் சாரின் கிராமப்புற வாழ்க்கையை மிகவும் வண்ணமயமாக வழங்கும் நோக்கம் என்னை இன்னும் பரிசோதனை செய்ய தூண்டியது. இயல்பாகவே ஒரு வெற்றிப் படத்தில் பணிபுரிந்த உணர்வு சீமராஜாவில் எனக்கு கிடைத்தது..!” என்கிறார் முத்துராஜ்.

இவர் சொல்லும் சுவாரஸ்யங்களை விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 13) அன்று பிரமாண்டமாக வெளியாகவுள்ள சீமராஜா படத்தில் கண்டுகளிக்கலாம்.