October 5, 2024
  • October 5, 2024
Breaking News
April 8, 2023

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப்பின் போட்டிக்கு செல்லும் வீரருக்கு அப்போலோ நிதியுதவி

By 0 1281 Views

இருமுறை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து உயிர் பிழைத்தவர்களுக்காக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் விளையாட்டு போட்டிக்கு சிகிச்சைக்கு அப்பாற்பட்டு அப்போலோ மருத்துவமனை நிதியுதவி!!

* தமிழகத்திலிருந்து ஒட்டு மொத்த விளையாட்டு வீரர்களின் பிரதிநிதியாக பங்கேற்கும் ஒரே ஒரு வீரர்

* உறுப்பு மாற்று செய்து கொண்டவர்களின் மத்தியில் புகழ் பெற்ற நட்சத்திரம்

சென்னை, 4 ஏப்ரல் 2023 :உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் வீரத்தை கொண்டாடவும், சிகிச்சைக்கும் அப்பால் நோயாளிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் சிறப்பு முயற்சியாக, ஆஸ்திரேலியாவில் இந்த மாதம் நடைபெறும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செல்லும் முன்னாள் நோயாளியும், நட்சத்திர விளையாட்டு வீரருமான சுமீர் குமாரின் பயணத்திற்கு அப்போலோ மருத்துவமனை நிதியுதவி செய்கிறது.

தொழில் முறை விளையாட்டு வீரரான சுமீர் குமார், கிரிக்கெட், பேட்மின்டன், தடகள விளையாட்டுகளில் சிறந்து விளங்குபவர். இருந்த போதிலும் பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் போராடிய அவர் கடந்த இருபதாண்டுகளாக மருத்துவ உதவியால் சமாளித்து வந்தார். கிரிக்கெட்டில் அவர் உச்சத்தில் இருந்த சமயத்தில், அவருக்கு கடுமையான சிறுநீரக செயலிழப்பு கோளாறு இருப்ப்து கண்டறியப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு பிறகு தீவிரமான விளையாட்டு பயிற்சியில் இருந்த போது, சுவாசத்தில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக மீண்டும் அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. இதனால் அப்போலோ மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை உள்பட பல்வேறு வகையான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

பெருந்தொற்று கால கட்டத்தில் கடுமையான இதய பாதிப்புக்குள்ளானதால் பக்க வாத தாக்குதலுக்கும் உள்ளானார். ஆனால் அப்போலோ மருத்துவமனையின் தொடர்ச்சியான ஆதரவும் மருத்துவ சிகிச்சையும், அத்துடன் அவரது உள்ள உறுதியும், தடையை தகர்த்தெறியும் மனமும், சுமீர் பல்வேறு இடர்களை சமாளித்து கடந்ததன் மூலம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பிழைத்தவர்களுக்கு ஒரு மிகச் சிறந்த முன்னுதாரணமாகவும் மாறினார்.

.அப்போலோ மருத்துவமனையின் சிறுநீரகவியல் மருத்துவரும், மூத்த மருத்துவ ஆலோசகருமான, டாக்டர் வெங்கடேஷ் ராஜ்குமார் (Dr Venkatesh Rajkumar, Senior Consultant, Nephrologist, Apollo Hospitals) கூறுகையில், “ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து பிழைத்துக் கொண்டவர்களுக்கான உலக அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் சுமீர் குமாரின் பயணத்திற்கு நிதியுதவி அளிப்பதில் அப்போலோ மருத்துவமனை பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

சிகிச்சை செயல்பாடுகளைத் கடந்து நோயாளிகளின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும் வகையில் அவர்களுடன் உறவு கொள்வதை மிகவும் முக்கியமான அம்சமாக நாங்கள் கருதுகிறோம். தமிழகத்திலிருந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் ஒரே பிரதிநிதியாக சுமீர் உள்ளார். இந்த நிதியுதவி முயற்சி, நமது நாட்டிலிருந்து வரும் ஹீரோக்களை சர்வதேச மேடைகளில் காட்சிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும்” என்றார்.

சிறுநீரக அறுவை சிகிச்சை மூலம் உயிர் பிழைத்தவரும், கிட்னி வாரியர்ஸ் பவுண்டேஷன், ஹோலிஸ்டிக் வெல்னெஸ் கோச் ஆகியவற்றின் தன்னார்வலருமான சுமீர் குமார் [Kidney Warriors Foundation and a Holistic Wellness Coach] கூறுகையில், ” பல ஆண்டுகளாக எனது பயணத்தின் ஒரு அங்கமாக அப்போலோ மருத்துவமனையிலிருந்து வருவது எனக்கு மிகவும் பெருமைக்குரியதாகும். மேலும் அவர்களின் மகத்தான ஆதரவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிதியுதவி வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது நான் இன்னும் மிகப் பெரிய உயரங்களை எட்டுவதற்கான ஒரு உந்துதலாக அமைந்துள்ளது. சிகிச்சை கால கட்டங்களில், மருத்துவர்களின் திறமையான சிகிச்சையும், அவர்களது மனிதாபிமான முறையிலான அணுகுமுறையும் எனது மனதில் அழிக்க முடியாத சித்திரமாக என்றென்றும் நி்லைத்திருக்கும். எனது வாழ்க்கை என்னைப் போலவே மற்றவர்களையும் முன்னேற ஊக்குவிப்பதுடன், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உயிர் பிழைத்தவர்களுக்கு தங்களது வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள ஒரு வலிமையான தூண்டுதலாகவும் இருக்கும் என நான் நம்புகிறேன்” என்றார்.

இந்த விளையாட்டுப் போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தாண்டு பெர்த்தில் நடைபெறும் உலக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கான விளையாட்டு போட்டியில், உடல் உறுப்பு தானத்தின் புதிய அடையாளமாக திகழும் தி கிஃப்ட் ஆஃப் லைஃப் பேட்டன் (The Gift of Life Baton) பரிசு வழங்கப்படும்.

அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் பற்றி..

1983-ம் ஆண்டு சென்னையில் டாக்டர் பிரதாப் ரெட்டியால் முதலாவது மருத்துவமனை தொடங்கப்பட்டபோது சுகாதாரத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியது அப்போலோ. தற்போது, உலகின் மாபெரும் ஒருங்கிணைந்த சுகாதாரப் பராமரிப்பு தளமாக விளங்கும் அப்போலோ 12,000-க்கும் மேற்பட்ட படுக்கைகள், 72 மருத்துவமனைகள், 5000 மருந்தகங்கள், 400-க்கும் மேற்பட்ட கிளினிக்குகள் மற்றும் 1228-க்கும் அதிகமான நோயறியும் மையங்கள், 700-க்கும் மேற்பட்ட டெலிமெடிசின் மையங்களைக் கொண்டுள்ளது. . 15-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்வி மையங்கள் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவையும் உள்ளன. இவற்றில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.. அப்போலோ மருத்துவமனை பல முன்னணி, நவீன மருத்துவ முறைகளை நடைமுறைப்படுத்துவதில் முதலாவதாக திகழ்கிறது. தென்கிழக்கு ஆசியாவின் முதல் ப்ரோட்டான் சிகிச்சை மையத்தை சென்னையில் அப்போலோ மருத்துவமனை நிறுவியுள்ளது.

ஒவ்வொரு நான்கு நாட்களிலும் அப்போலோ மருத்துவமனை குழுமம் 10 லட்சம் மக்களை ஏதோ ஒரு வகையில் தொடுகிறது. இந்திய அரசாங்கம் அப்போலோ மருத்துவமனைக்காக நினைவு தபால் தலையை [commemorative stamp] வெளியிட்டுள்ளது. இது அரிதாக வழங்கப்படும் கவுரவம் ஆகும். மருத்துவமனை ஒன்றுக்கு இந்த கவுரவம் கிடைத்தது இதுவே முதல் முறை. அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மத்திய அரசு 2010-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் தரம் வாய்ந்த சிகிச்சைகளை வழங்குவதிலும், மருத்துவ கண்டுப்பிடிப்புகளை கண்டறிவதிலும் உலகத்தரம் வாய்ந்த க்ளினிக் சேவைகளை அளிப்பதிலும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதிலும் அப்போலோ மருத்துவமனை தொடர்ந்து தனது தலைமைத்துவ இடத்தை தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. அப்போலோ குழுமம் உலக மருத்துவமனைகள் பட்டியலில் தரவரிசையில் முன்னணி இடம் வகிக்கிறது

For more information please contact:

APOLLO HOSPITALS I Suganthy 9841714433