கொரோனாவிற்காக தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும் இந்த கால கட்டம், ஒரு வகையில் வெகு மோசமான பொருளாதார வீழ்ச்சியையும் ஏழைகளை பாதிப்பதாகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் ஏழை, எளியோருக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் தனது பெண்குழந்தை ஜெய கௌஷிகாவின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு எளியவர்கள் 100 பேருக்கு தலா 1 மூட்டை என 100 மூட்டை அரிசி வழங்கியுள்ளார்.
பிரபல நடிகை Dr. ஜெயசித்ரா அவர்களின் புதல்வனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரீஷ் வழக்காமாகவே தனது பிறந்த நாள் மற்றும் முக்கியமான நல்ல நாட்களை முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று (31.03.2020) மார்ச் 31 தனது பெண்குழந்தை ஜெய கௌஷிகா பிறந்த நாளை,வெகு வித்தியாசமான வகையில் கொண்டடியுள்ளார் அம்ரீஷ்.
இது குறித்து இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் கூறியதாவது..
இன்று (31.03.2020) மார்ச் 31 என் பெண் குழந்தை ஜெய கௌஷிகாவின் முதலாவது பிறந்த நாள். இதனை வெகு விமரிசையாக கொண்டாட பல மாதங்களாக திட்டமிட்டு இருந்தேன்.
ஆனால் கொரோனா வைரஸால் எல்லோரும் வீட்டிற்குள் இருக்கும் நிலை உருவாகியிருக்கிறது. இந்த கொரோனாவை தடுக்க ஒரே வழி நம்மை தனிமைப்படுத்தி கொள்வது தான். நாங்கள் குடும்பமாக எங்களை தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறோம். யாரும் வெளியில் செல்வதில்லை.
இந்த தனிமைப்படுத்தல் காலம் பல ஏழை எளியோரை கடுமனளவு பாதிக்கிறது என்பதை அறிந்தேன் என் குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு அவர்களில் 100 பேருக்கு 100 மூட்டை அரிசி வழங்கியிருக்கிறோம்.
அரசு, மருத்துவகழகம் அறிவுறுத்திய, வழிமுறைகளின் படியும் காவல்துறை வழிகாட்டிதலையும் பின்பற்றி, காவல்துறை டெபுடி கமிஷ்னர் அசோக் குமார் மேற்பார்வையில், மிகவும் பதுகாப்பான முறையில் எளியவர்களுக்கு அரிசி மூட்டையை விநியோகம் செய்தோம்.
இந்த பணி மனதிற்கு பெரும் மகிழ்ச்சி தருவதாக அமைந்தது. இந்நேரத்தில் எங்களின் இப்பணிக்கு உறுதுணையாக இருந்த காவல்துறை கமிஷ்னர் விஸ்வநாத் அவர்களுக்கும் டெபுடி கமிஷ்னர் அசோக்குமார் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
உலகம் பல இன்னல்களை கடந்தே இன்றைய நிலைக்கு வந்திருக்கிறது. அதுபோல் அனைவரும் இணைந்து இந்த கொரோனாவையும் வென்றெடுப்போம்..!