November 22, 2025
  • November 22, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தீபாவளிக்கு எங்க ஓடிடி பாக்காதீங்க- அமேசான் அதிரடி வேண்டுகோள்
October 26, 2021

தீபாவளிக்கு எங்க ஓடிடி பாக்காதீங்க- அமேசான் அதிரடி வேண்டுகோள்

By 0 502 Views

அமேசான் பிரைம், தீபாவளி பண்டிகையையொட்டி வீடியோ ஒன்று வெளியிட்டிருக்கிறது. கவனம் ஈர்க்கும் அந்த வீடியோவில் மிர்சாபூர் இணைய தொடர் பிரபலமான கலீன் பையா (Kaleen Bhaiyya) நடிச்சிருக்கார்.

அந்த வீடியோ, தீபாவளி அன்று ‘அமேசான் பிரைம்’ ஓடிடி தளத்தில் உள்ள படங்களை பார்க்க வேண்டாம் என்பதை வலியுறுத்துகிறது.

எந்த நிறுவனமும் செய்ய துணியாததை அமேசான் பிரைம் நிறுவனம் செய்துள்ளது. அந்த வீடியோவில், ‘நாளை அமேசான் பிரைம் நம்முடன் தான் இருக்கப்போகிறது. நாம் அதை பின்பு கூட பார்த்துக் கொள்ளலாம்.

ஆனால் தீபாவளி வருடத்திற்கு ஒருமுறை தான் வருகிறது. ஆகவே அன்றைய நாள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்’ என்பதை வலியுறுத்தும் வகையில் அந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான இந்த வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.

இது ‘நெகட்டிவ் பப்ளிசிட்டி’ என கூறப்பட்டாலும், அமேசானின் இந்த முயற்சி பாராட்டப்பட்டு வருகிிறது.