April 29, 2024
  • April 29, 2024
Breaking News
March 24, 2022

போரூர் ஆல்ஃபா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 22வது பட்டமளிப்பு

By 0 275 Views

சென்னைப் போரூரில் உள்ள ஆல்ஃபா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 22வது பட்டமளிப்பு விழா 23 மார்ச் 2022 அன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. ஆல்ஃபா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25 வது வெள்ளி விழா ஆண்டில் 700 க்கும் மேற்பட்ட இளம் பட்டதாரிகள் சிறப்பான முறையில் பட்டத்தைப் பெற்றனர்.

தலைமை விருந்தினராக திரு. விக்ரம் கபூர், IAS, அவர்கள் (தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை) சிறப்பு விருந்தினர்களாக Dr. சுல்தான் அகமது இஸ்மாயில், (மாநில திட்டக்குழு உறுப்பினர்) மற்றும் Dr. சலீம் அலி, IPS (ஓய்வு), தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர், திரிபுரா DGP மற்றும் CBI சிறப்பு இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டாக்டர் திருமதி கிரேஸ் ஜார்ஜ், நிறுவனத் தலைவர், திருமதி சுஜா ஜார்ஜ், துணைத் தலைவர், ஆல்ஃபா கல்விக் குழுமம், ஆல்ஃபா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர், முனைவர் அ.சிவசங்கர், துணை முதல்வர் முனைவர் பெனிட்டா மெர்லின், சுழற்சி இரண்டின் ஒருங்கிணைப்பாளர் & தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழரசி கோதைமார்பன், கல்லூரின் துறைத் தலைவர்கள், மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

முறையான அணிவகுப்புடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. டாக்டர் திருமதி கிரேஸ் ஜார்ஜ் நிறுவனத் தலைவர், (ஆல்ஃபா கல்விக் குழுமம்) பட்டமளிப்பு விழாவினைத் தொடங்கி வைத்தார். தலைமை விருந்தினராக திரு. விக்ரம் கபூர் அவர்கள், IAS, (தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை) சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசுகையில், வாழ்க்கை நிலையில்லாதது, நாம் அனைவரும் அதனுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும். நிகழ்வுகளை மாற்ற முடியாது. ஆனால், நாம் எதிர் கொள்ளும் விதத்தை மாற்ற முடியும். வேகமாக மாறிக்கொண்டிருக்கும் சூழலுக்கு ஏற்ப நாமும் மாறிக் கொள்ள வேண்டும். அதற்காக, நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும். அதிக அளவில் தொடர்ந்து கற்க வேண்டும். எனவே, நீங்கள் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் என்னவென்றால், உங்கள் சாதனைகளில் நிறைவு கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் மற்றவர்களுடன் ஒரு போதும் போட்டி கொள்ள வேண்டாம். வாழ்க்கையில் நீங்கள் எதை செய்தாலும் அதில் பெருமிதம் கொள்ள வேண்டும். நீங்கள் அனைவரும் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறினார். இவரின் சிறப்புரை இளம் பட்டதாரிகளுக்கு மிகவும் ஊக்கம் கொடுக்கும் வகையில் அமைந்து இருந்தது.

(Diploma),பட்டயம், (Degree)பட்டங்களைத் தலைமை விருந்தினர் இளம் பட்டதாரிகளுக்கு வழங்கினார். திருமதி சுஜா ஜார்ஜ் துணைத் தலைவர், ஆல்ஃபா கல்விக் குழுமம், உறுதிமொழியினைக் கூற, மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். ஆல்ஃபா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு மூன்று மதிப்புமிக்க விருதுகளை வழங்குவது மரபு.

சிறந்த ஆல்ஃபா மாணவருக்கான கண்ணமா ஜெயா நினைவு விருது –  

செல்வி. சிந்துஜா – மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறை (ECS) சுழற்சி – I , மற்றும் திரு. இரமேஷ் – கணினி பயன்பாட்டியல் துறை (BCA) சுழற்சி – II ஆகியோர் விருதினைப் பெற்றனர். சிறந்த ஆல்ஃபா மாணவனுக்கான N. ஜாரஜ் நினைவு விருது திரு. ஹரிஹரன் – உயிரி தொழற்நுட்பவியல் துறை (BT) சுழற்சி – I, மற்றும் திரு. நிஷோக் – வணிகவியல் துறை (B.COM) சுழற்சி – II ஆகியோர் விருதினைப் பெற்றனர். சிறந்த ஆல்ஃபா மாணவிக்கான அன்னம்மா முல்லக்கல் நினைவு விருது செல்வி. ஆலிஸ் கேத்தரினா கணினி பயன்பாட்டியல் துறை (BCA) சுழற்சி – I மற்றும் செல்வி. கிருஷ்ணவேணி, வணிக மேலாண்மை துறை (BBA) சுழற்சி – II ஆகியோருக்குக் கல்லூரி சார்பாக பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கபட்டன.

பல்கலைக்கழகத்தின் தரவரிசை அடிப்படையில் சிறந்த மாணவர்களான செல்வி. சிந்துஜா – மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறை (ECS), திரு. சரத் சந்தோஷ் – மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறை (ECS), செல்வி. பிரியங்கா – மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறை (ECS) மற்றும் திவ்யா முதுகலை வணிகவியல் துறை (M.COM) ஆகியோருக்குக் கல்லூரி சார்பாக பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கபட்டன.