July 1, 2025
  • July 1, 2025
Breaking News
August 17, 2019

பிக் பாஸ் 2 ஐஸ்வர்யா தத்தாவின் ஆபத்தான விளையாட்டு

By 0 995 Views

‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (PUBG) சுருக்கமாக ‘பப்ஜி’ என்பது காமெடி திரில்லரான படம்.

இந்தப்படத்தை ‘தாதா 87’ படத்தை இயக்கிய ‘விஜய் ஸ்ரீஜி’ இயக்குகிறார். இதில் தமிழ் ‘பிக் பாஸ் சீசன் 2’ புகழ் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாகிறார். நயன்தாரா போல் கதையின் நாயகியாம். மிஸ் தத்தாவைத் தவிர மேலும் இந்தப் படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

இதில் ‘பப்ஜி’ என்ற கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் க்ரைம் ப்ரான்ச் ஆபிஸராக நடிக்கிறாராம். ஜூலி, தாதாகதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

Aiswarya Dutta in Pubg

Aiswarya Dutta in Pubg

படத்தின் கதையை பற்றி இயக்குனர் கூறுகையில், “பப்ஜி கேம் மாதிரி அஞ்சு பேரு ஒரு கேம் விளையாடுறார்கள். ஜெயிச்சவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு . அதில் அவங்களுக்கு என்ன நடக்கிறது என்பதுதான் படம்..!” என்கிறார்.

மேலும் இந்தப்படத்தில் திரையில் இப்போது நடிக்காமல் ஒதுங்கி இருந்த சிறந்த பழைய நடிகர்களை நடிக்க வைக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் இவர் அப்படி சாருஹாசன், ஐனகராஜை அழைத்துவந்து நடிக்க வைத்தவர்.

அத்துடன் இப்போது இயக்கி வரும் ‘பீட்ரு’ என்ற படத்தில் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவிர்தனை நடிக்க வைக்கிறார்.

சேஃபா கேம் விளையாடுங்க..!