யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் சாந்தனு, கிக்கி விஜய், சிரிஷ் உள்ளிட்டோர் அணிந்திருந்த டி சர்ட் வாசகமான #ஹிந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டேக் இன்று முழுதும் வைரலாகி வந்தது தெரிந்திருக்கும்.
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு எப்போதுமே குரல் கொடுத்து வரும் நிலையில், இந்த டிரெண்டிங்கை பார்த்த தமிழ் பொண்ணு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தானும் அந்த டி சர்ட்டை வாங்கி அணிந்து கொண்டு போட்டோ போட்டிருந்தார்.
அதைப் பார்த்த பலரும் ‘இந்த வீடியோ-விலே இருக்கறவர்தானே ஐஸ்வர்யா ராஜேஷ்..? அப்ப இந்தி பேசிய இந்த பொண்ணுக்கு இப்ப மட்டும் இந்தி மறந்து போச்சா?’- என்று கேட்டு ஒரு வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
அதில் ஐஸ் பாலிவுட்டுக்கு நடிக்கப் போனபோது இந்தியில் பேசியது பதிவாகி இருக்கிறது.
எல்லா மொழியிலும் வாய்ப்புத் தேடி நடிப்பது தவறில்லை ஆனால் மாநிலத்துக்கு ஒரு முகம் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை ஐஸ்வர்யாவுக்கு யாராவது புரிய வைத்தால் சரி.
கீழே ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தியில் பேசிய வீடியோ…