April 26, 2024
  • April 26, 2024
Breaking News
October 1, 2020

ஜனாதிபதி பிரதமர் பயணிக்க 1400 கோடி யில் சிறப்பு விமானம் இந்தியா வந்தது

By 0 789 Views

இந்தியாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வெளிநாடுகளுக்கு பயணிக்க ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே அமெரிக்க அதிபர் வெளிநாடு சுற்றுப்பயணங்களுக்கு பயன்படுத்தும் விவிஐபி விமானங்களை போலவே இந்தியாவும் விமானங்கள் வாங்க அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்தமிட்டது.

அதன்படி அதிநவீன பாதுகாப்பு வசதிகளை கொண்ட போயிங் 777-300 ER ரக இரண்டு விமானங்களை போயிங் நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்நிலையில் இந்தியாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வெளிநாட்டு பயணங்களுக்காக உருவாக்கப்பட்ட விவிஐபி ‘ஏர் இந்தியா ஒன்’-ன் முதல் விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது. இந்த பிரத்யேக விமானத்தின் விலை சுமார் ரூ.1400 கோடியாகும்.

சிறப்பம்சங்கள்: 143 டன் எடை கொண்ட இந்த விமானம் 43,100 அடி உயரம் வரை பறக்கும் திறன்கொண்டது. படுக்கை அறை, கூட்ட அரங்கு, மருத்துவக்குழு தங்கும் அறை, அறுவை சிகிச்சை அறை, சமையல் அறை, பாதுகாப்பு வீரர்கள் தங்கும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.

பிரம்மாண்டமான இந்த விமானத்தில் GE90-115BL இரட்டை இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய விமான எஞ்சின்களில் இந்த ரகமும் ஒன்று.

அமெரிக்க அதிபருக்காக பயன்படுத்தப்படும் போயிங் 747-200பி விமானத்தில் இருக்கும் அதே ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு கவச தொழில்நுட்பம் இந்த விமானங்களிலும் கொடுக்கப்பட இருக்கிறது.

ஏர் இந்தியா ஒன் விமானத்தின் ஸ்பெஷலே ஏவுகணையால் அதைச் சுட்டுவீழ்த்த முடியாது. ஏவுகணைப் பாதுகாப்பு தொழில்நுட்பம் எனப்படும் Large Aircraft Infrared Countermeasures (LAIRCAM) மற்றும் Self-Protection Suites (SPS) தொழில்நுட்பத்தை இந்த விமானம் கொண்டுள்ளது.

இந்தியாவில் (SPS) தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட முதல் இந்திய விமானங்கள் இவைதான். (SPS) தொழில்நுட்பம் பொருத்தப்பட்டால், எதிரிகளின் ரேடார்களைச் செயலிழக்க வைக்கமுடியும். இந்த விமானங்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரை இடைநிறுத்தாமல் பயணிக்கும் திறன் கொண்டவை.