December 2, 2024
  • December 2, 2024
Breaking News
May 23, 2020

சொத்து தகராறில் பிரபல நடிகையின் மகன் தற்கொலை?

By 0 553 Views

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ’உயர்ந்த மனிதன்’, `வசந்த மாளிகை’, `நிறைகுடம்’ உள்ளிட்ட படங்களிலும், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக `கண்ணன் என் காதலன்’, `ஊருக்கு உழைப்பவன்’ உள்ளிட்ட படங்கலில்   த்தவர் வாணிஸ்ரீ.

இவரது மகன் அபினய வெங்கடேஷ கார்த்திக் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 36. அபினய்க்கு 4 வயதில் ஒரு மகனும் 8 மாதங்கள் ஆன ஒரு மகளும் இருக்கின்றனர்.

அபினய்யின் மனைவி ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியை. சில மாதங்களுக்கு முன்பு சொத்தைப் பிரிப்பதில், குடும்பத்துக்குள் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது, அப்பா – மகன், அம்மா – மகள் என இரு தரப்பாக மாறியிருக்கிறது

Vanisri with Sivaji Ganesan in Vasantha Maligai

Vanisri with Sivaji Ganesan in Vasantha Maligai

அந்த சண்டை. சொத்துப் பிரச்னை தந்த மன அழுத்தத்தால் இப்படியாகியிருக்கலாம் என்று சிலரும் வேறு சிலரோ அபினய் தற்கொலை செய்திருப்பதாகக் கூறுகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து வந்த அபினய் சென்னைக்கு வராமல், அப்பா கருணாகரன் இருக்கும் திருக்கழுக்குன்றம் இல்லத்திற்கு போயிருக்கிறார்.

மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அவர், தற்கொலை செய்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. எனவே இதுகுறித்த விசாரணைகள் நடைப்பெற்று வருகிறது..