January 25, 2026
  • January 25, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சாலை விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா – இளைய மகள் மருத்துவ மனையில் அனுமதி
November 1, 2022

சாலை விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா – இளைய மகள் மருத்துவ மனையில் அனுமதி

By 0 563 Views

நடிகை ரம்பா தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கனடாவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ரம்பா சென்ற கார் விபத்துக்குள்ளானது. அப்போது ரம்பா அவரது குழந்தைகள் மற்றும் அவர்களின் தாயார் காரில் இருந்தனர்.

ரம்பாவின் இளைய மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் ரம்பாவுக்கு பலத்த காயம் ஏற்படவில்லை. டெஸ்லா நிறுவனம் தயாரித்துள்ள அந்தக் கார் விபத்தில் பழுதடைந்தது.

கார் விபத்து குறித்த செய்தியை ரம்பா தனது சோசியல் மீடியா பகிர்ந்துள்ள பதிவில்.“குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்லும் போது, ​​எங்கள் கார் மற்றொரு கார் மீது மோதியது. என்னுடன் என் குழந்தைகளும் ஆயாக்களும் காரில் இருந்தனர். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். எங்களுக்கு சிறு காயங்கள் உள்ளன.

ஆனால் எனது பெண் குழந்தை சாஷா இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கிறார். எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோரிக்கையுடன் காரின் புகைப்படங்களை பகிர்ந்ததோடு, மருத்துவமனை அறையில் இருந்து தனது மகளின் புகைப்படத்தையும் ரம்பா பகிர்ந்துள்ளார். 

ரம்பாவின் இந்த பதிவைக் கண்ட பலரும் அவரது மகள் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.