January 1, 2026
  • January 1, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • என்னைப் பற்றி வரும் செய்திகள் தவறானவை – காமெடி நடிகர் செந்தில்
May 6, 2020

என்னைப் பற்றி வரும் செய்திகள் தவறானவை – காமெடி நடிகர் செந்தில்

தமிழ் திரையுலகில் கவுண்டமணி செந்தில் நகைச்சுவை தனி இடம் உண்டு இந்த இரட்டையர் காமெடியை ரசிக்க தமிழ் சினிமா ரசிகனை இல்லை என்று சொல்ல முடியும்.

ஆங்கிலப் படங்களில் ஒரு காலத்தில் ஹார்டி தமிழில் என்ற இரட்டையர் செய்த காமெடி அட்டகாசங்கள் தவிர்க்க முடியாதவை. அதுபோலவே கவுண்டமணி-செந்தில் தமிழில் பெயர் பெற்றனர்.

கவுண்டமணி செந்தில் இருவரும் ஒரு கட்டத்தில் தாங்கள் இல்லாத படங்களே இல்லை எனும் அளவுக்கு நடித்து வந்திருந்தாலும் காலமாற்றத்தினால் இவர்கள் இருவரும் இப்போது நடிக்காமல் ஓய்வெடுத்து வருகிறார் கள்.

கவுண்டமணி யாவது சில படங்களில் அவ்வப்போது தலைகாட்டி வந்தாலும் செந்தில் எநத படத்திலும் சமீபத்தில் நடிக்கவில்லை.

இந்நிலையில் அவரைப் பற்றி ஒரு செய்தி 2 நாட்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இன்னொரு நகைச்சுவை நடிகரான வடிவேலு ஒரு கட்டத்தில் ட்விட்டர் அக்கவுண்டில் தன்னை இணைத்துக் கொண்டு ரசிகர்களுடன் பேசி வருவதுபோல் செந்திலும் டிவிட்டரில் தனக்கென்று ஒரு கணக்கு ஆரம்பித்து விட்டார் என்பதுதான் அந்த செய்தி.

 ” இது உண்மையா..?” என்று அவரிடம் கேட்டபோது அதை முற்றிலும் மறுத்தார் அவர். டிவிட்டர் என்றால் என்னவென்று தனக்கு தெரியாது என்று அவரே வாக்குமூலம் அளித்த வீடியோ கீழே…