March 28, 2023
  • March 28, 2023
Breaking News
July 6, 2020

எழுத்தாளர் ஆக மாறிய நவரச நாயகன் கார்த்திக்

By 0 562 Views

நவரசத் திலகம் என்றழைக்கப்பட்ட நடிகர் முத்துராமனின் நடிப்பு வாரிசாக சினிமாவுக்குள் வந்து தனக்கென தனி பாணி நடிப்பைக் கொடுத்து நவரசநாயகன் என்ற பட்டத்தையும் பெற்றவர் நடிகர் கார்த்திக்.

இலகுவான ஆனால் ஆழமான நடிப்பின் மூலம் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் ஈடுபாடு காட்டாமல் சினிமாவை விட்டு விலகினார்.

அவரது மகன் கௌதம் கார்த்திக் நடிக்க வந்த பிறகு தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ் ஆக ‘ராவணன்’, ‘அநேகன்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் ‘Mr.சந்திரமெளலி’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கார்த்திக்.

பின்னர் சில மாதங்களுக்கு முன்பு படம் இயக்குவதற்காக கார்த்திக் கதை எழுதி வருவதாகத் தகவல் வெளியானது.

தற்போது இந்தக் கரோனா ஊரடங்கில் வீட்டிலேயே இருப்பதால், தனது சுயசரிதையை எழுதி வருகிறார் கார்த்திக். இதில் அவர் திரையுலகிற்கு வந்த விதம், பிரபலங்களுடனான நட்பு, சந்தித்த மனிதர்கள் உள்ளிட்டவற்றை எழுதி வருகிறார். இதைப் புத்தகமாக வெளியிடுவாரா என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை.

மேலும், முழுமையாக 2 படங்களுக்கான கதையை எழுதி முடித்துவிட்டாராம் அவர்.

தன் நடிப்பு கரியர் இடையில் காதல் மன்னனாக இருந்தவர் அது குறித்து தன் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறாரா என்பது தெரியவில்லை.