May 17, 2024
  • May 17, 2024
Breaking News

Monthly Archives: July 2018

தர்மபுரி பஸ் எரிப்பு, நாவரசு கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய பரிசீலனை

by on July 8, 2018 0

எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி நீண்டகாலம் ஆயுள் தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்து வரும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் அதற்குத் தகுதியான கைதிகள் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அ.தி.மு.க.வினர் நெடுஞ்செழியன், மது, முனியப்பன் ஆகியோர் கடந்த 18 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதால அவர்களை விடுவிக்க ஆலோசனை நடந்து வருகிறது. 2000 ஆம் ஆண்டு […]

Read More

விளையும்போதே சோறானால் விறகு எதுக்கு, வெறட்டி எதுக்கு – கே.பாக்யராஜ் சுவாரஸ்யம்

by on July 8, 2018 0

புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகியுள்ள படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’. கிராந்தி பிரசாத் இயக்கத்தில் ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் வி.சி. திம்ம ரெட்டி தயாரித்துள்ளார்.   இப் படத்தின் பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டுப் பேசியதிலிருந்து…   “இயக்குநர் கிராந்தி பிரசாத் தமிழும் தெரியாமல் தெலுங்கு ஆட்களை வைத்து ஒரு தமிழ்ப்படம் இயக்கியிருக்கிறார். அவர் வெவ்வேறு ஏழு மொழிகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்துப் பணியாற்ற வைத்துள்ளார். அதில் இங்கே பேசியவர்கள் எல்லாரும் தட்டுத்தடுமாறி சிரமப்பட்டு  முயற்சி செய்து தமிழில் பேசினார்கள், அந்த […]

Read More

தொகுதிக்குள் செல்லும் அன்புமணி ராமதாஸை அரசு தடுக்க முடியாது – ஐகோர்ட் கருத்து

by on July 7, 2018 0

சென்னை -சேலம் பசுமைச்சாலை அமைக்க, பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தத் திட்டத்துக்காக காஞ்சீபுரம், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற நாடாளுமன்ற தொகுதி எம்.பி. அன்புமணி ராமதாஸ் தன் தொகுதியில் உள்ள மக்களின் உணர்வைத் தெரிந்துகொள்ள, கருத்து கேட்கும் கூட்டத்தை நடத்த முடிவு செய்தார். ஆனால், அவருக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து பா.ம.க. […]

Read More

படத்தலைப்புக்கு கமிஷனைக் கட்டுப்படுத்த கே.பாக்யராஜின் யோசனை

by on July 6, 2018 0

முழுக்க மலேசியாவில் நடப்பது போன்ற கதைப் பின்னணி கொண்ட திரைப்படம் ‘வெடிகுண்டு பசங்க’. ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ் சார்பில் ஜனனி கே. பாலு மற்றும் ‘வீடு புரொடக்ஷன்ஸ்’ சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் இப்படத்தை பெண் இயக்குநரான டாக்டர்.விமலா பெருமாள் இயக்கியிருக்கிறார். தினேஷ் குமார், சங்கீதா கிருஷ்ணசாமி நாயகன், நாயகியாக தங்கமணி வேலாயுதன், டேவிட் ஆண்டனி, ஆல்வின் மெர்வின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘டோரா’, ‘குலேபகாவலி’ படங்களுக்கு இசையமைத்த விவேக் & மெர்வின் இப்படத்திற்கு இசையமைக்க, […]

Read More

மிஸ்டர் சந்திரமௌலி விமர்சனம்

by on July 6, 2018 0

இரண்டு யானைகள் மோதிக்கொண்டால் அதில் சிக்கிச் சிதையுண்டு போவது சின்னச் சின்ன எறும்புகள்தான். அதே எறும்பு யானையின் காதுக்குள் போனால் என்னவாகும் என்பதுதான் இந்தப்படத்தின் கருவும். இரண்டு கார்ப்பரேட் கம்பெனிகள் நீ பெரியவனா நான் பெரியவனா என்கிற ஈகோ போட்டியில் மோத, அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதில் நாயகன் கௌதம் கார்த்திக்கும் சிக்க என்ன நடக்கிறது என்ற கதையை ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் திரு. இன்றைக்கு நாட்டில் அதிக பயனீட்டாளர்களைக் கொண்டிருக்கும் பெரிய நெட்வொர்க்குகளில் […]

Read More

அரசு ஆணைக்கு எதிராக ஸ்டெர்லைட் கேட்ட இடைக்கால தடைக்கு பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு

by on July 5, 2018 0

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம், போலீஸாரின் துப்பாக்கிச்சூடு என்று தொடர்ந்ததில் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியாது என்று தமிழக அரசு சார்பில் சொல்லப்பட்டது. ஆனால், இந்த அரசாணையை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில், ‘ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டத்துக்குப் புறம்பானது. ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் […]

Read More

கௌதம் கார்த்திக்குக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும் படக்குழு

by on July 4, 2018 0

சினிமாவில் கொஞ்ச காலம் முன்பு வரை படம் வெளியாகும் சமயத்தில் தயாரிப்பாளரும், இயக்குநரும் பேசிக்கொள்ள முடியாத அளவுக்கு விலகி நிற்பார்கள். ஆனால், காலம் மாறிவிட்டது. ஆரோக்கியமான படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு படங்களை எடுப்பதால் பட வெளியீட்டுக்கு முன்பு படக்குழுவுக்கு நன்றி தெரிவிப்பது ஒரு கலாச்சாரமாகவே இப்போது மாறி வருகிறது. அந்தக் கலாச்சாரத்தின் அடிப்படையில் ஜூலை 6 வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் படத்துக்காக தனது படக்குழுவுக்கு தனது மனதில் ஆழத்தில் இருந்து இப்படி நன்றி தெரிவிக்கிறார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன். […]

Read More